இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது

இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா மாடல் கார் இந்தாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.15.49 லட்சத்தில் இருந்து துவங்கும் ஆக்டேவியா டாப்-எண்ட் டீசல் மாடல் ரூ.22.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  
 
இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆக்டேவியா மாடலை விட புதிய மாடலின் விலை ரூ.7000 வரை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் மூன்று இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் எட்டு வித ட்ரிம்களும் வழங்கப்படுகிறது.   
 
புதிய 2017 ஸ்கோடா ஆக்டேவியா முழுமையான எல்.இ.டி. லைட்களும், லோ மற்றும் ஹை பீம்களை தேர்வு செய்யும் பாட் தனியே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னஸ் அளவை தானாக மாற்றியமைத்துக் கொள்ளும் அடாப்டிவ் லைட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஸ்கோடா ஆக்டேவியாவில் வழங்கப்பட்டுள்ள புதிய வகை அலாய்-வீல்களுடன், பிரத்தியேக வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப்களும், ஒட்டுமொத்த வடிவமைப்பு உள்ளிட்டவை காரின் தோற்றத்தை முழுமையாக மாற்றுவதோடு காரை அழகாகவும் வெளிப்படுத்துகிறது.  
 
உள்புற வடிவமைப்புகளிலும் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்-லின்க் வசதி கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய ஏர்கான் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
பி்ன்பக்க இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் காரின் ஏ.சி.யை இயக்க ஏதுவாக பிரத்தியேக செயலி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பூட் ஸ்பேஸ் 590 லிட்டர் அளவு உள்ளது.  
 
ஸ்கோ ஆக்டேவியா 2017 மாடலில் 1.4 TSI, 1.8 TSI மற்றும் 2.0 TDI இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் எமிஷன்கள் முந்தைய மாடல்களை விட குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து இன்ஜின்களும் டர்போ பவர் கொண்டுள்ளது. இதனால் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் 140PS/250 செயல்திறன் கொண்டுள்ளது.
 
1.8 பெட்ரோல் இன்ஜின் 180PS செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு DSG பாக்ஸ் கொண்டுள்ளது. 2.0 லிட்டர் டீசல் 6-ஸ்பீடு DSG மற்றும் மேனுவல் பாக்ஸ் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. புதிய ஸ்கோடா ஆக்டேவியா 2017 முந்தைய மாடல்களை விட சற்றே அகலமாக அமைந்துள்ளது.
 
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய ஸ்கோடாவில் ஹேண்ட்ஸ்ஃப்ரீ பேரலெல் பார்க்கிங் மற்றும் எட்டு ஏர்-பேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 2017 ஸ்கோடா ஆக்டேவியா ஹூன்டாய் ஏலான்ட்ரா மற்றும் டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.