இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R முன்பதிவு துவங்கியது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 200R மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. 
 
இந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரீம் 200R முன்பதிவு செய்வோர் ரூ.1000 முதல் ரூ.5000 வரை முன்பணமாக செலுத்த வேண்டும். புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீடு ஜூன் மாத முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது.
 
 
முன்பக்கம் சிங்கிள்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 17.0 இன்ச் அலாய் வீல், 100/80 R17 டையர் மற்றும் பின்புறம் 130/17 R17 ரக டையர் வழங்கப்பட்டுள்ளது.
 
வடிவமைப்புகளை பொருத்த வரை புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலின் முன்பக்கம் பெரிய ஹெட்லேம்ப், அதன் மேல் இரண்டு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் ரெவ் கவுண்ட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருக்கிறது.
 
எக்ஸ்ட்ரீம் டூயல்-டோன் கிராஃபிக்ஸ் கொண்ட ஃபியூயல் டேன்க், முன்பக்கம் காற்றோட்டமான கௌவுல், ஃபியூயல் டேன்க், தரையில் இருந்து 795 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. மாடலின் இருபுறங்களும் கூர்மையாகவும், பின்புற ஃபென்டர் மெல்லியதாகவும், நீளம் குறைவாகவும் இருக்கிறது. 
 
எல்இடி டெயில் லைட்கள் எக்ஸ்ட்ரீம் 200R தோற்றத்தை வித்தியாசமாக்குகிறது. ஸ்ப்லிசட் கிராப் ஹேன்டிள்களை கொண்டிருக்கும் எக்ஸ்ட்ரீம் 200R இந்தியாவில் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.