இந்த ஓவியம் உங்கள் வீட்டில் இருந்தால் உடனடியாக தூக்கி வீசுங்கள்.. ஆபத்து

இந்த ஓவியம் உங்கள் வீட்டில் இருந்தால் உடனடியாக தூக்கி வீசுங்கள்.. ஆபத்து

நம் வீட்டை வித்தியாசமான ஓவியங்கள் மற்றும் கலைகளினால் அலங்கரிக்க அனைவருக்குமே அலாதியான பிரியம் இருக்கும்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருசில ஓவியங்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதால், அதை தவிர்ப்பது தான் நல்லது.

நடராஜர்

நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையின் ஓவியத்தை வரைந்து அல்லது போட்டோவாக வைத்திருப்பார்கள்.

இந்த ஓவியம் சிவனின் நடன நிலை அழிவிற்கானது என்பதால், இதை வீட்டில் வைத்திக்கக் கூடாது.

கப்பல்

கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது நாம் ஈடுபடும் அனைத்து செயலிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. எனவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுவது நல்லது.

நீர் வீழ்ச்சி

நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருந்தாலும் இது போன்ற ஓவியங்கள் நமது வீட்டில் வறுமையை ஏற்படுத்தும்.

விலங்குகள்

புலி போன்ற விலங்குகளின் ஓவியம் பார்ப்பதற்கு, அட்டகாசமாக இருந்தாலும் அது மாதிரியான ஓவியத்தை நம் வீட்டில் வைத்தால், சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.

தாஜ்மஹால்

தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இந்த ஓவியத்தை வீட்டில் வைக்கும் போது, அது எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க செய்யும்.

மகாபாரதம்

மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அது மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு, வீட்டில் அதிக சண்டை சச்சரவுகளை அதிகரிக்கச் செய்யும்.

குழந்தை அழும் ஓவியம்

குழந்தைகள் அழுவது போன்ற ஓவியங்கள் பார்ப்பதற்கு மார்டன் ஆர்ட் போன்று காணப்படலாம். ஆனால் இந்த ஓவியங்களை வீட்டில் வைப்பதால், அது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

போர் அல்லது மாயாஜாலம்

போர், பில்லி சூனியம் அல்லது பேய் போன்ற ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் உள்ளவர்களின் மனதை பாதிப்பதோடு, அதிக வாக்குவாத சர்ச்சையை ஏற்படுத்தும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.