இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு வாழைப்பழம் போதுமே

இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு வாழைப்பழம் போதுமே

 உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாழைமரத்தின் கனி, தண்டு, பூ, இலைகள் போன்ற அனைத்துமே சிறந்தவை.

எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வினை காணலாம்.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச் சத்துக்கள், விட்டமின் B6 மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு போன்ற கனிமச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

வாழைப்பழத்தின் மருத்துவ நன்மைகள் என்ன?
  • ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 105 கலோரிகள் உள்ளது. இதை உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிடுவதால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதுடன், உடலிற்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  • கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு கடுமையான வலி இருந்தால், அதற்கு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இதனால் தசைகள் நன்கு தளர்வாகி, தசைப்பிடிப்பு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது.
  • வாழைப்பழமானது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, உடலில் நீர்ச்சத்தை சமநிலையில் வைக்க உதவுவதோடு உடலிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றி, மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • வயிற்றில் அமிலத் தன்மையை குறைக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு அதிகம் உள்ளது. எனவே வாழைப்பழம் சாப்பிடுவதால், அது அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • வாழைப்பழம் மற்றும் அதன் தண்டில் நார்ச்சத்து சதிகமாக உள்ளதால், அது குடல் இயக்கத்தை எளிதாக்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
  • கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் நீரிழப்பு மற்றும் எலெக்ட்ரோலைட்டுகள் குறைபாட்டு பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆனால் அதற்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
  • ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால், அது வாயுத்தொல்லை, சிறுநீரகக்கல், ஆழ்ந்த உறக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்க செய்து, ஆண்களின் பாலியல் உணர்வுகளையும் தூண்ட உதவுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.