இனி 50 MB அல்ல... 5 MB-தான்... டேட்டாவைக் காப்பாற்றும் ஃபேஸ்புக்கின் மெசெஞ்சர் லைட்!

இனி 50 MB அல்ல... 5 MB-தான்... டேட்டாவைக் காப்பாற்றும் ஃபேஸ்புக்கின் மெசெஞ்சர் லைட்!

டிஜிட்டல் இந்தியா, 4G வேகத்தில் முன்னேற்றம், ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு எனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா பற்றி இத்தனை செய்திகள் வந்தாலும் கூட, இன்னுமே இந்தியாவின் மீது இருக்கும் முத்திரைகளில் ஒன்று, இணைய வேகம் குறைவாக உள்ள நாடு என்பது. இதற்கு முன்னர் இருந்ததை விடவும் பலபடிகள் முன்னேறியிருக்கலாம். ஆனால் இன்னும் இணையவேகத்தைப் பொறுத்தவரை நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால் அதுவரைக்கும் இங்கே கடைவிரிக்காமல் இருக்க முடியாது அல்லவா? அதற்காக டெக் நிறுவனங்கள் கொண்டுவரும் சேவைகள்தான் இலவச வைஃபை வசதி, இன்டர்நெட் வசதிகள், தங்கள் சேவைகளின் லைட் வெர்ஷன்கள் போன்றவை. கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கென பிரத்யேகமாக யூ-ட்யூபின் லைட் வெர்ஷனான \'யூ-டியூப் கோ-வின் பீட்டா வெர்ஷனை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் லைட், மெசெஞ்சர் லைட் போன்ற சேவைகளையும் அறிமுகம் செய்தது. இதில் மெசெஞ்சர் லைட் கடந்த வருடம் வெளியானது. முதல்கட்டமாக ஒரு சில நாடுகளில் மட்டும் வெளியான மெசெஞ்சர் லைட், பின்னர் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவுக்கும் வந்துள்ளது Messenger Lite

ஃபேஸ்புக் லைவ், ஹை குவாலிட்டி வீடியோ ஸ்ட்ரீமிங், கலர் கலரான ஸ்டேட்டஸ் வசதிகள் என 4G யூசர்களுக்கு ஃபேஸ்புக் மொபைல் ஆப்பில் நிறைய வசதிகள் இருந்தாலும், ஒரு 2G யூசர் எதிர்பார்ப்பது என்னவோ, ஸ்டேட்டஸ் மற்றும் கமென்ட்ஸ் வசதிகளை மட்டும்தான். இந்த அடிப்படை வசதிகளை மட்டுமே நச்சென தந்து ஹிட் அடித்தது ஃபேஸ்புக் ஆப்பின் லைட் வெர்ஷன். அதே வரிசையில் மெசெஞ்சர் லைட்டும் இடம் பிடிக்குமா?

முழுமையான மெசெஞ்சர் ஆப் சைஸ் 50 MB என்றால், இந்த லைட் வெர்ஷன் 5 MB-யிலேயே முடிந்துவிடுகிறது (டிவைஸ்களுக்கு ஏற்ப இது மாறுபடலாம்). அதிக மெமரியை எடுத்துக்கொள்ளும் சிக்கல் இல்லாததால், குறைந்த அளவு இன்டர்னல் மெமரி கொண்ட போன்களுக்கும் ஏற்றபடி இருக்கிறது மெசெஞ்சர் லைட். மெசெஞ்சரின் முழு வெர்ஷனில் இருக்கும் Gif அனுப்பும் வசதி, சாட் பாட்ஸ், வாய்ஸ்கால் மற்றும் வீடியோ காலிங், ஸ்டோரீஸ், சாட்டிங்கில் இருக்கும் எமோஜி ரியாக்ஷன்கள் போன்றவை எல்லாம் இதில் இருக்காது. வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதிகளுக்குப் பெரும்பாலானோர் மெசெஞ்சரைப் பயன்படுத்துவதே கிடையாது என்பதால், அவை இல்லை என்பதெல்லாம் இதில் குறையே இல்லை. மற்றபடி வாட்ஸ்அப் போலவே இன்ஸ்டன்ட்டாக மெசேஜ்கள் அனுப்பவும், உரையாடவும் இந்த லைட் ஆப் நல்ல ஆப்ஷன். குறிப்பாக மொபைலின் ஃபேஸ்புக் ஆப்பில் மெசேஜ் பக்கம் சென்றாலே, மெசெஞ்சரை இன்ஸ்டால் செய்யச் சொல்லும் ஃபேஸ்புக்கிற்காக விருப்பமின்றி 100 MB-களுக்கு மேல் இனி இழக்கத் தேவையில்லை. குறைவான டேட்டாவை இழுக்கும் ஆண்ட்ராய்டு லைட் ஆப்பை இன்ஸ்டால் செய்தே சமாளித்துக் கொள்ளலாம். எனவே மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களை விடவும், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குத்தான் இது ப்ளஸ் பாயின்ட். 

\"மெசெஞ்சர்

மொத்தத்தில் குறைவான ஆப் சைஸ், 2G நெட்வொர்க்கிற்கிலும் கைகொடுக்கும் வேகம், குறைவான டேட்டா பயன்பாடு, அந்த மெசெஞ்சரின் அதே தோற்றம், குறைவில்லாத அடிப்படை அம்சங்கள் எனப் பயன்படுத்த எளிமையாக இருக்கிறது இந்த ஆப். இந்த வசதிகளுடன் கூடுதலாக, ட்ரெண்ட்டிற்கு ஏற்ப எமோஜிக்கள் மற்றும் Gif ஆப்ஷன்களையும் சேர்த்தால் நிச்சயம் லைட் வெர்ஷனுக்கு ஒரு லைக் போடலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கான இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.