இரண்டு முக்கிய அம்சங்கள், புதிய நிறத்தில் வெளியாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு

இரண்டு முக்கிய அம்சங்கள், புதிய நிறத்தில் வெளியாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சப்-500சிசி பிரிவில் நல்ல வரவேற்பை பெற்ற கிளாசிக் 350 மற்றும் 500 மோட்டார்சைக்கிள்களின் புதிய பதிப்புகளை ராயல் என்ஃபீல்டு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன் கிரே நிறத்திலும், கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் வெளியிடப்பட இருக்கிறது. 

டீம்-பி.ஹெச்.பி. சார்பில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ராயல் என்ஃபீல்டு மாடல்களில் புதிய நிறங்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் 500 மாடல்களில் தண்டர்பேர்டு மாடலில் வழங்கப்படடுவதை போன்ற ஸ்விங் ஆர்ம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

\"\"

புதிய மாடல்களில் ஸ்விங் ஆர்ம் பொறுத்தப்படும் பட்சத்தில் பின்புற டிஸ்க் பிரேக் வழங்க முடியும், இந்த அம்சம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. புதிய ஸ்விங் ஆர்ம் வாகனத்தை சிறப்பாக கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். கூடுதலாக ஸ்விங் ஆர்ம் வடிவமைப்பு ABS லைன் வழங்கவும் வழி செய்யும்.

இந்தியாவில் 2018-ம் ஆண்டு முதல் ABS வகை பிரேக் கட்டாயப்படுத்தப்பட இருப்பதால் ராயல் என்ஃபீல்டு மாடல்கள் இதற்கு தயாராக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ராயல் என்ஃபீல்டு பதிப்புகள் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.