இரண்டே நாள் தான்.. நிரந்தரமாக பொடுகை ஒழிக்கலாம்

இரண்டே நாள் தான்.. நிரந்தரமாக பொடுகை ஒழிக்கலாம்

தலையில் பொடுகு இருந்தால் அரிப்பு, முடி உதிர்தல், தலையில் புண் ஏற்படுதல், முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் அதிகமாகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

எனவே இயற்கையான வழியில் தலையில் உள்ள பொடுகை முற்றிலும் ஒழிக்க, அற்புதமான எண்ணெய் இதோ!

தேவையான பொருட்கள்
  • வேப்பிலை - 1 கைப்பிடி
  • துளசி - 1/2 கைப்பிடி
  • புதினா - 1/2 கைப்பிடி
  • தேங்காய் எண்ணெய் - 150 மிலி
  • பச்சை கற்பூரம்
  • ஓம விதைகள்
தயாரிக்கும் முறை

வேப்பிலை, துளசி, புதினா ஆகியவற்றை நன்றாக கழுவி கெட்டியான பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் 150 மிலி தேங்காய் எண்ணெய்யை 5 நிமிடங்கள் சூடாக்கி, அதில் அரைத்து வைத்த பேஸ்டை கலந்து மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கி, இறக்குவதற்கும் 1 நிமிடத்திற்கு முன் ஓமம் மற்றும் பச்சை கற்பூரத்தை தூளாக்கி சேர்க்க வேண்டும்.

எண்ணெய் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

எண்ணெயின் சூடு ஆறும் வரை மூடியினால் அந்த எண்ணெய்யை மூடக் கூடாது. ஏனெனில் ஆவியினால் உண்டாகும் நீர் எண்ணெய்யில் விழுந்து எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

பயன்படுத்தும் முறை

இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரத்திற்கு மூன்று முறை இரவில் தூங்கும் போது தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின் காலையில் குளிக்கும் முன் சிறிதளவு எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஊறவைத்து குளிக்க வேண்டும்.

வறட்சியை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வேப்பிலை ஷாம்பு உபயோகிக்கும் போது, தலை வறட்சியாகும். இதை தடுக்க ஷாம்புடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகித்தால், தலைமுடி மென்மையாகுவதுடன், பொடுகும் நீங்கும்.

குறிப்பு

வேம்பு, துளசி, புதினா ஆகியவை தலைக்கு குளிச்சியை தரும் என்பதால் இது சளி, சைனஸ் தொல்லை உள்ளவர்கள் உபயோக்கிக்கக் கூடாது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.