இருசக்கர வாகன விற்பனை: இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்த ஹோன்டா

இருசக்கர வாகன விற்பனை: இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்த ஹோன்டா

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிக வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் மொத்தம் 10,48,143 மோட்டார்சைக்கிள்களையும் விற்பனை செய்து சுமார் 19.8 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

இதே காலகட்டத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 10,10,559 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து, 10.45 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் 8,74,852 யுனிட்களையும், பஜாஜ் ஆட்டோ 11,28,425 யுனிட்களை விற்பனை செய்தது. தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் 33,44,292 யுனிட்களையும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,34,504 யுனிட்களை விற்பனை செய்திருந்தது. 

எனினும் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஹீரோ தனது முதலிடத்தை சென்னையை சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்திடம் இழந்தது. ஹீரோ மோட்டோ கார்ப் ஸ்கூட்டர் விற்பனை ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 4,43,321 யுனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4,48,321 யுனிட்களை விற்பனை செய்த நிலையில், 1.12 சதவிகித சரிவை சந்தித்துள்ளது.



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 5,66,362 யுனிட்களை விற்பனை செய்துள்ளது, இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு 4,00,804 யுனிட்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் முந்தைய ஆண்டை விட 41.3 வளர்ச்சியை சந்தித்துள்ளது. மோட்டார்சைக்கிள் பிரிவில் இந்த ஆண்டு 4,84,370 யுனிட்களை விற்பனை செய்து, முந்தைய ஆண்டில் 4,64,318 யுனிட்களை விற்பனை செய்து 4.32 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. 

இதேபோல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 3,78,304 யுனிட்களும், முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 3,07,150 யுனிட்களை விற்பனை செய்து சுமார் 23.17 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது. சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2,02,771 யுனிட்களை விற்பனை செய்து கடந்த ஆண்டை விட 61.8 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது. ஐந்தாது இடத்தில் யமஹா நிறுவனம் 2,26,249 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.