இருதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்

இருதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்

 இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் பொழுது இருதய பாதிப்பு ஏற்படுகின்றது. ரத்த குழாய் அடைப்பினால் ரத்த குழாய் இறுகி விடுகின்றது. ரத்த ஓட்டம் குறைந்து விடுகின்றது. 


ரத்த ஓட்டம் குறையும் பொழுது ஆக்ஸிஜன் அளவும் இருதயத்திற்கு கிடைப்பது குறைந்து விடுகின்றது. இந்த பாதிப்பின் அறிகுறிகளாக நெஞ்சுவலி, அசவுகர்யம், அழுத்தம், இறுக்கம், மயக்கம், அதிக சோர்வு, பலமின்மை ஏற்படுகின்றது. மேலும் சிறிது வேலை செய்தாலும், உடற்பயிற்சி செய்தாலும் உடல் இயலாமை ஏற்படுகின்றது. 

இதனை வராமல் எப்படித் தான் தடுப்பது? இருதயத்திற்கு நட்பான உணவினை கொடுத்தாலே இப்பிரச்சினைகளை தடுத்து விடலாம். இயற்கையே நம் உடலுக்காக அநேக நன்மைகளை கொடுக்கின்றது. இவைகளை நாம் நன்கு அறிந்து கடைபிடித்தாலே போதும். ஏராளமான நன்மைகளைப் பெற்று விடலாம்.

வைட்டமின் டி : வைட்டமின் டி என்றவுடன் நாம் நம் எலும்பின் ஆரோக்யத்தோடு மட்டுமே நினைத்துப் பார்க்கின்றோம். ஆனால் ஆய்வுகள் கூறுவது என்னவென்று தெரியுமா? இருதய ரத்த நாள பாதிப்புகளைத் தவிர்க்க வைட்டமின் டி சத்து முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறுகின்றனர். வைட்டமின் டி சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு இருதய பாதிப்பின் அபாயம் இரு மடங்காகக் கூடுகின்றது. பக்க வாதம் அபாயமும் இரு மடங்காகக் கூடுகின்றது என்கின்றனர். 

பொதுவில் வைட்டமின் டி அளவு 30&60 ஸீரீ/னீ/ என இருப்பது நல்லது. காலை சூரிய ஒளி சத்து கிடைக்கச் செய்கின்றது என்றாலும் முட்டை, காளான், சில வகை மீன்கள் என உணவு மூலமும் இச்சத்து கிடைக்கின்றது. 

மக்னீசியம் : இந்த தாது உப்பு மிகச் சிறிய அளவில் நமது உடலின் அனைத்து செல்களிலும் இருக்கும். வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவும் இந்த உப்பு ரத்த குழாய்களை மிக ஆரோக்யமாக வைக்க உதவுகின்றது. இருதயம் சிறப்பாய் செயல்பட உதவுகின்றது. சில ஆய்வுகள் மக்னீசியம் குறைபாடு இருதய நோய் பாதிப்பிற்கு சில முக்கியமான காரணங்களில் ஒரு காரணமாகக் கூறுகின்றது. சிறந்த அளவு மக்னீசியம் கிடைக்க உதவும் உணவுகள் முந்திரி, பாதாம், அத்திபழம் ஆகியவை ஆகும். 

கால்ஷியம் : கால்ஷியம் இருதய தசைகள் வேலை செய்ய மிக மிக அவசியமான ஒன்று. இது தேவையான அளவு இல்லாமல் இருந்தால் இருதயத்தினால் சுருங்கி விரிய முடியாது. அதே சமயம் அதிக அளவில் கால்ஷியம் இருப்பதும் தவறு. இது முறையற்ற இருதய துடிப்பினையும் மற்றும் சில பாதிப்புகளையும் தரும். தினமும் 1000 மி.கி. அளவு பரிந்துரைக்கப்படுகின்றது. ரத்தத்தில் 8.5, 10.2 னீரீ/பீ/ அளவு தேவையான அளவாக கூறப்படுகின்றது. 

\"\"

பொட்டாசியம் : ஒவ்வொரு தசையும் சுருங்கி விரிய பொட்டாசியம் தாது உப்பும் அவசியம். இதன் குறைபாடு இருதய படபடப்பினை ஏற்படுத்தலாம். ரத்தத்தில் 3.6, 5.2 னீனீபீ/லி சரியான அளவு என குறிப்பிடப்படுகின்றது. தக்காளி, வாழைப்பழம், உருளை, பசலை இவை சிறந்த பொட்டாசியம் அளவினைத் தரும். 
வைட்டமின் பி6 : பிரிடாக்ஸின் எனப்படும் இந்த வைட்டமின் பீன்ஸ், மீன், பச்சை இலை கீரைகள், ஆரஞ்சு இவற்றில் கிடைக்கின்றது. 

ஃபோலேட் : பி9 எனப்படும் இந்த வைட்டமின் கர்ப்பகாலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாட்டினைத் தவிர்க்கின்றது. நல்ல அளவு இது ரத்தத்தில் இருக்கும் பொழுது 10 சதவீத இருதய பாதிப்பின் அபாயம் குறைகின்றது. மேலும் பக்கவாதம் இறப்பு கூட தவிர்க்கப்படுகின்றது. பரோகலி, முட்டை, பசலை, சூரிய காந்தி விதை இவைகளில் பி9 சத்து நன்கு கிடைக்கின்றது. 

வைட்டமின் பி12 : பி12 சத்து குறைபாடு மிகவும் ஆபத்தானதே. இதன் அறிகுறிகளாக சோர்வு, மூட்டுவலி ஏற்பட்டாலும் அதனை பலரும் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். நரம்புகளின் இயக்கத்திற்கும், சிகப்பு ரத்த அணுக்கள் உருவாவதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் இருதய பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியமாகின்றது. பொதுவில் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பி12 குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு என்றாலும் யாருக்கு வேண்டுமானாலும் இக்குறைபாடு ஏற்படலாம். வைட்டமின் பி12 குறைபாடு அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கின்றது. முட்டை, பால் சார்ந்த உணவுகளில் கிடைக்கின்றது. வயது கூடும் பொழுது உணவில் இருந்து இச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறன் குறையும் என்பதால் மாத்திரையாக மருத்துவர் பரிந்துரைப்பார். 

தயமின் பி1 : மாவுசத்தின் செரிமானத்திற்கு உதவுகின்றது. தயமின் குறைபாடு நரம்பு மண்டல பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இருதய பாதிப்பு இருக்கும் பலருக்கும் தயரின் குறைபாடு இருப்பதனை ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பி, வைட்டமின் பச்சை கீரைகள், முழு தானியங்கள், அடர்ந்த நிறம் கொண்ட காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் இவற்றில் உள்ளன. 

வைட்டமின் கே2 : இந்த வைட்டமின் பற்றி அதிகம் மக்கள் அறிவதில்லை. இந்த வைட்டமினே கால்ஷியத்தினை உடல் ஏற்றுக் கொள்ள செயல் ஆற்றுகின்றது. இந்த வைட்டமின் பால், பால் சார்ந்த உணவு, முட்டைகளில் கிடைக்கின்றது. 

மேகா 3 :ஓமேகா 3 சத்து இருதய பாதிப்பின் மூலம் ஏற்படும் இறப்பினைத் தவிர்க்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது நல்ல கொழுப்பினை கொடுத்து, கெட்ட கொழுப்பினை குறைத்து, சில வகை புற்று நோய்களின் அபாயத்தினை குறைத்து உடலின் வீக்கங்களை நீக்குகின்றது. 
உணவில் மீன் சேர்த்து கொள்வதும், சத்து மாத்திரையாக இதனை எடுத்துக் கொள்வதும் மிகவும் நல்லது. 

கோபேன் : இப்பொருள் உடல் வீக்கத்தினை தவிர்த்து, நோய் எதிர்ப்பாக செயல்படுகின்றது. இருதய நோய் பாதிப்பினை தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. கொய்யா, தக்காளி, தர்பூசணி இவற்றில் இச்சத்து அதிகமாக இருக்கின்றது. மேலும் தக்காளி சிறந்த புற்றுநோய் எதிர்ப்பாளி. சுவாச மண்டல நோய்களுக்கு தினம் அறை தக்காளி அளவு உண்பது மிகவும் நல்லது. கல் பாதிப்பு உடையவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.