உங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி

உங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி

‘எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம்’ என்று சொல்கின்றோம். அந்த சிரசிற்கு உள்ளே இருக்கும் மூளையே மிக முக்கியமானது. அதே போல் அனைவரும் ஆசைப்படும் ஒன்று. தலைக்கு வெளியே இருக்கும் முடியினைப் பற்றியும் தான். எந்த அளவு சிறந்த அறிவாளியாக நாம் இருக்க வேண்டும் என்று கவலைப்படுகிறோம், முயற்சிக்கிறோம். 

அதே அளவு அடர்ந்த முடிக்காக கவலைப் படாதவர், முயற்சிக்காதவர் மிக மிக குறைவு எனலாம். ஏனெனில் முடி இயற்கை தந்த அழகு. இது தலைக்கு ஒரு பாதுகாப்பென இயற்கையாய் உருவாகி இருந்தாலும் மனிதனின் கண்ணோட்டத்தில் அழகே முக்கிய இடம் பெறுகின்றது.

இந்த தலைமுடி ஒருவருக்கு பாதுகாப்பு, அழகு மட்டும் தானா? தலைமுடி கூட உங்கள் ஆரோக்கியத்தினைப் பற்றி கூறிவிடும். 

* இரும்பு சத்து குறைவு: உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் சோர்வு, தலைசுற்றல், மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும். 40 வருட ஆய்வு கூறும் மற்றொரு அறிகுறி இரும்பு சத்து குறைவு உடலில் ஏற்படும் பொழுது மிக அதிகமாக தலைமுடி கொட்டும். ஆகவே முதலில் தலைமுடி அதிகம் கழண்டு கொட்டினால் உங்களுக்கு ரத்த சோகை இருக்கின்றதா? என பரிசோதித்துக் கொள்ளுங்கள். ரத்த சோகைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது தலைமுடி கொட்டுவதும் நின்றுவிடும். 

* பல வைட்டமின் சத்து, தாது உப்புகள் குறைபாட்டினையும் தலைமுடி கூறும். தேவையான அளவு வைட்டமின்களும், தாது உப்புகளும் இருந்தால் முடி ஆரோக்கியமாய் தெரியும். இச்சத்துகள் குறைவாய் இருந்தால் முடியே நோயாளி போல் தெரியும். வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ மற்றும் செலினியம், காப்பர், ஸிங்க், மக்னீசியம் இவை மிக முக்கியமானதாக இருக்கின்றது. உடலில் இவை சரியாக இருக்கின்றபடி உங்களை நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 

* வறண்ட, செதில் செதிலாய் உதிரும் மண்டை. தலைமுடியின் நுனி இரண்டாய் உடைதல் இவை அநேகருக்கு இருக்கும். ஆரோக்கியமான கொழுப்பு உடலில் இல்லை என்றால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படும். சத்தான கொட்டைகள், மீன் போன்றவை இந்த சத்து குறைபாட்டினை நீக்க உதவும். 

\"\"

* உங்கள் உடலில் புரதக் குறைபாடு இருந்தால் உங்கள் முடி எப்படி இருக்கும் தெரியுமா? துண்டு துண்டாய் உடையும். முடியில் உறுதி என்பதே இராது. உணவில் நல்ல புரதம் சேர்க்க இப்பாதிப்பு நீங்கும். 

* உடலில் நீர் சத்து சற்று குறைந்து இருந்தாலும் நீங்கள் அதனை சற்று கவனக் குறைவாக விட்டு விடலாம். முடி மிகவும் பலவீனமாகி கொத்து கொத்தாய் கழண்டு விழும். ஆக முதலில் நீங்கள் அளவான நீர் குடிக்கின்றீர்களா என சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள். 

* சினைப்பை கட்டி உள்ளதா. இந்த பாதிப்பு 10-ல் ஒருவருக்கு பருவ காலத்தில் அதாவது குழந்தை பேறு தகுதியுடைய காலத்தில் ஏற்படுகின்றது. முறையற்ற மாதவிடாய், பரு, எடை கூடுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு தலைமுடி மெலிதாகவும், பின்நோக்கிய முடி இழப்பும் ஏற்படும். முகத்தில், உடலில் முடி அதிகரித்து தோன்றும். மருத்துவ சிகிச்சை நல்ல பலன் அளிக்கும். 

* தைராய்டு குறைபாடு. தைராய்டு குறைந்து காணப்படும் நிலை ஏற்படும் பொழுது அதிக எடை, சோர்வு, உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இக்குறைபாட்டால் மிக மிக அதிகமாக முடி கொட்டி விடும். இருக்கும் கொஞ்சம் முடியும் ஜீவனற்று இருக்கும். பொதுவில் இப்படி முடி கொட்டினாலே மருத்துவர் தைராய்டுக்கான ரத்த பரிசோதனை தான் செய்வார். 

* கர்ப்ப காலம், மாதவிடாய் நின்ற காலம். கர்ப்ப காலம் அதிக ஹார்மோன் மாறுபாடுகளை உடலில் ஏற்படுத்தும். அதிக ஈஸ்டிரஜன் அதிக முடி வளர்ச்சியினை ஏற்படுத்தும். ஆனால் கர்ப்ப காலத்தில் எண்ணெய் சுரப்பிகள் சற்று அதிகமாக சுரப்பதால், நீண்ட முடி மடிந்து காணப்படும். வறண்ட முடி எண்ணெய் பிசுபிசுப்பாய் இருக்கும். ஆனால் இவை பிரசவத்திற்கு பிறகு பழைய நிலை திரும்பும். மாதவிடாய் நின்ற காலத்தில் ஹார்மோன் குறைவதால் மிக மிக அதிகமாக முடி குறையும். ஆண் ஹார்மோன் இக்காலத்தில் அதிகரிப்பதால் முகத்தில் முடி சற்று அதிகமாய் ஏற்படும். 

* மன அழுத்தம்: இந்த காரணத்தினால் உடலில் ஏற்படாத பாதிப்புகளே இல்லை எனலாம். முடி கொட்டுவதற்கு மன அழுத்தம் மிக முக்கிய காரணம். இதற்கு தீர்வு தியானம் தான். 

* குறைவான தூக்கம் முடியினை வெகுவாய் கொட்டச் செய்யும். தூக்கம் தான் உடலிலுள்ள திசுக்களை ரிப்பேர் செய்து புதுப்பிக்கும். தலைமுடி திசுக்களுக்கும் இது பொருந்தும். 

* கூடும் வயது. வயது கூடும் பொழுது தலைநரை, முடி மெலிதல், வழுக்கை என தலைமுடி பாதிப்புகள் கூடவேச் செய்யும். 

* ஒருவனுக்கு அதிக ஆசைகள் தான் வறுமை. அவனது மன நிறைவுதான் செல்வம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.