உங்கள் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள்

உங்கள் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள்

இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முடியை இழந்துவிடுகின்றனர். முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி வளராவிட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

இங்கு ஒருவருக்கு ஏன் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

* மோசமான உணவுப் பழக்கமும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை எந்நேரமும் உட்கொள்ளும் போது, போதிய வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உடலுக்கு கிடைக்காமல், முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களின்றி, முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட், உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும்.

* உங்களுக்கு முடி வளராமல் இருப்பதற்கான காரணங்களுள் மற்றொன்று டென்சன். ஒருவர் அளவுக்கு அதிகமான மனதளவில் கஷ்டப்பட்டால், அது முடியின் வளர்ச்சியை தான் பாதிக்கும். மேலும் தலைமுடியின் வேர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுத்தாலும், முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.* தலைமுடி வேகமாக உலர வேண்டும் என்பதற்காக பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். இப்படி ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தினால், அதனால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வதோடு, அதன் வளர்ச்சி முழுமையாக தடுக்கப்படும். அதேப் போல் வெளியே வெயிலில் செல்லும் போது, தலைக்கு ஏதேனும் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தால் தலைமுடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

* தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக்குள்ளாகி, முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது

* தலைமுடியைப் பராமரிக்கிறேன் என்று பலர் ஷாம்புக்கள், கெமிக்கல் நிறைந்த சீரத்தைப் பயன்படுத்துவார்கள். இப்படி கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தினால், அவை முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக தடுத்துவிடும்.

* தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம். எனவே முடி அதிகம் உதிர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.