உச்சக்கட்ட பாதுகாப்பு வசதி பெற்ற ஸ்கோடா ரேபிட்

உச்சக்கட்ட பாதுகாப்பு வசதி பெற்ற ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த ரேபிட் மாடலில் முன்பக்கம் இரண்டு ஏர்-பேக்களை வழங்கியிருந்தது. பயணர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் இரண்டு ஏர்-பேக்களை கூடுதலாக வழங்கியுள்ளது. தற்சமயம் நான்கு ஏர்-பேக்கள் ஸ்கோடா ரேபிட் டாப்-எண்ட் மாடலில் மட்டும் வழங்கப்படுகிறது.
 
ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா டாப்-எண்ட் மாடல்களில் ஆறு ஏர்-பேக்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்கோடா புதிய மாற்றத்தை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ மற்றும் மாருதி சுசுகி சியாஸ் போன்ற மாடல்களில் இதுவரை இரண்டு ஏர்-பேக் மட்டுமே வழங்கப்படுகிறது. 
 
ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேபிட் செடான் மாடலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வித மாடல்களில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேபிட் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் புதிய காரின் அழகை மேம்படுத்தும் விதமான மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. 
 
 
அனைத்து ரேபிட் மாடல்களிலும் இரண்டு ஏர்-பேக்களை ஸ்கோடா வழங்கியிருக்கிறது. எனினும் வளர்ந்து வரும் போட்டி காரணமாக ரேபிட் டாப்-எண்ட் மாடலில் மட்டும் கூடுதலாக இரண்டு ஏர்-பேக்களை ஸ்கோடா வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்கோடா மாடல்களில் ரிவர்ஸ் கேமரா அம்சம் மற்றும் 16.0 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டது. மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
 
பட்டாம்பூச்சி கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பகலில் எரியும் எல்இடி மின்விளக்கு, குரோம் டோர் ஹேன்டிள்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்லின்க் கனெக்டிவிட்டி மற்றும் ஸ்டீரிங்கில் ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல்கள், ஃபாக்ஸ் லெதர் இன்டீரியர் போன்ற அம்சங்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன. 
 
மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், 1.6 லிட்டர் MPI பெட்ரோல்-இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 153 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் மற்றொரு மோட்டார் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 250 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. 
 
இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக் ஆப்ஷனை பொருத்த வரை பெட்ரோல் மாடலில் 6-ஸ்பீடு டிப்டிரோனிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் டீசல் மோட்டாரில் 7-ஸ்பீடு DSG யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.