உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் இனிப்பு

உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் இனிப்பு

இனிப்பு: இது நாக்கில் இனிக்கின்றது. ஆனால் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கின்றது. அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மிகப்பெரிய ஆய்வு நடத்தினர். 15 வயதிற்கு மேற்பட்ட நபர்களை ஆயவுக்கு உட்படுத்தினர். யாரெல்லாம் அவர்களது அன்றாட உணவில் 28 சதவீதம் கூடுதல் சர்க்கரை எடுத்துக் கொள்கிறார்களோ! அவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் இரு மடங்காக அதிகரிக்கின்றது என்று அந்த ஆய்வின் முடிவில் கூறியுள்ளனர்.

குளிர்பானங்கள், பழ ரசங்கள், கேக், பால் சேர்த்த இனிப்புகள் (உம்) ஐஸ்கிரீம் போன்றவை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய பாதிப்பு கூடுதல் வேகத்துடன் ஏற்படுகின்றதாம்.

அதிக சர்க்கரையே மறதி நோய்க்கு காரணம் ஆகின்றது என 2017 ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

* சர்க்கரை உங்கள் கல்லீரலை ஆல்கஹாலை போல அதிகம் பாதிக்கின்றது. பருத்த கல்லீரல் வீக்கம், கல்லீரல் பாதிப்பு என பல பாதிப்புகளை நீட்டிக் கொண்டே செல்கிறது.
* சர்க்கரை புற்று நோய் செல்களின் நண்பன்.
* அதிக சர்க்கரை வயதுக்கு மீறிய முதுமையை தோற்றத்திலும் செயலிலும் ஏற்படுத்துகின்றது.
* சர்க்கரை கூடுதலாய் கொள்பவர்கள் இரவில் தூக்கம் வராது தவிப்பர்.

* சர்க்கரை அதிகம் கொள்பவர்களுக்கு நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு கூடுகின்றது.
* அதிகம் சர்க்கரை, சர்க்கரை சார்ந்த பொருட்களை உட்கொள்பவர்கள் சோகமாகவே, மனச் சோர்வோடு இருப்பர்.
* இவர்களுக்கு மூச்சு பாதை பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
* அதிக சர்க்கரை உயர்ரத்த அழுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் காரணமாகின்றன.
* அதிக எடை கூட முக்கிய காரணம் ஆகின்றது.
* பற்கள் பாதிக்கப்படுகின்றன.
* ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படுகின்றது

இதனையெல்லாம் படித்த பிறகாவது அன்றாடம் அதிக இனிப்பு சேர்ப்பதை குறைப்போம்.

ஆரோக்கிய வாழ்வு முறை:

ஆரோக்கிய வாழ்வு என்பது உடல், மனம் இரண்டும் நன்றாக இருப்பதுதான்.

* 3 முறை உணவு அவசியம். இதன் நடுவில் சிறிய அளவில் பழங்கள் இருக்கலாம். இரவு உணவு பெரியதாக இருக்கக் கூடாது. இரவு உணவு தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு சாப்பிட வேண்டும்.

* அதிக பழங்கள், காய்கறி முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த பால் வகை உணவுகள் அனைத்தும் இருக்க வேண்டும்.
* கொழுப்பு குறைந்த அசைவம், முட்டை, மீன், கொட்டைகள் இவை இருக்க வேண்டும்.
* பொதுவில் காய்கறி உணவே அதிகம் சிபாரிசு செய்யப்படுகின்றன.

* காய்கறி, பழங்களை அப்படியே சாப்பிட்டாலும் சமைத்து சாப்பிட்டாலும் அவற்றினை நன்கு கழுவ வேண்டும்.
* சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் அடிக்கடி சர்க்கரை அளவினை பரிசோதித்து கிட்டத்தட்ட சரியான அளவிலேயே வைத்துக் கொள்வது நல்லது.
* ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்கள் காலை, மதிய, இரவு உணவினை முறையான நேரத்தில் வைத்துக் கொள்வது அவசியம்.

* உடல் இளைக்க கடும் பட்டினி இருப்பது அதிக தீமையைத் தரும். இவர்கள் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் இவற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* முறையான அன்றாட உடற்பயிற்சியானது முதுமை கால நோய்களை தவிர்க்கவும், குறைக்கவும் வல்லது.
* ரத்த குழாய் அடைப்பு, இருதய பாதிப்பு, வாதம், உயர் ரத்த அழுத்தம் இவை அனைத்தையுமே அன்றாட உடற்பயிற்சியின் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
* மூட்டு வலி உடற்பயிற்சியின் மூலம் வெகுவாய் கட்டுப்படும். அன்றாட உடற்பயிற்சி தன்னம்பிக்கை தரும்.* மன உளைச்சல் கட்டுப்படும்.
* அன்றாட உடற்பயிற்சி எடை குறைய உதவும்.
* ஒரேயடியாக 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய முடியா விட்டால் 10, 10, 10 நிமிடங்களாக விட்டு விட்டு செய்யுங்கள். பிறகு நேரத்தினை கூட்டிக் கொள்ளுங்கள்.
* எந்த வகை உடற்பயிற்சியும் நல்லதே.

கீழ்க்கண்டவர்கள் உடற்பயிற்சி செய்யும் முன் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

* 40 வயதினைத் தாண்டிய ஆண்கள்.
* 50 வயதினைத் தாண்டிய பெண்கள்.
* இருதய நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா, எலும்பு தேய்மானம் உடையவர்கள்.

* ரத்த கொழுப்பு உடையவர்கள்.
* எளிதில் சோர்வு அடைபவர்கள்.
* மூச்சு வேகமாய் வாங்குபவர்கள்.
* அதிக உடல் எடை உடையவர்கள் ஆகும்.

உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் இவர்களுக்கு இருதய நோயும், சில வகை புற்று நோயும் எளிதில் தாக்குகின்றது. சர்க்கரை நோய் எளிதில் ஏற்படுகின்றது எடை வேகமாய் கூடுகின்றது. 

மனநலம் காக்க:

* நன்கு தூங்குங்கள் 8-9 மணிநேர தூக்கம் மிக அவசியம்.
* புதிதான உணவு, புதிய இடங்களுக்குச் செல்லுதல் இவற்றினை செய்யுங்கள்
* மூளைக்கு பயிற்சி-செஸ், குறுக்குப் போட்டி பழகுங்கள்
* முயன்று ஒரு வேலையை முடித்து பின் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள்.
* பொழுதுபோக்கு அவசியம்.

* முடியாதவற்றினை தலைமேல் போட்டு திண்டாடாதீர்கள். மென்மையாக உறுதியாக நோ சொல்ல பழகுங்கள்.
* சிரியுங்கள்
* தேவைப்படின் மனநல மருத்துவரின் உதவி பெறுங்கள் மேலும்
* மது, புகை, புகையிலை இவற்றினை அடியோடு நிறுத்துங்கள்.
* வாகனங்களில் சர்கஸ் செய்யாதீர்கள்.
* அதிகம் வெய்யிலில் இருப்பதனைத் தவிருங்கள்.

எலுமிச்சை சாறு : 

* உடலின் நச்சினை நீக்கும்
* செரிமான சக்தியினைக் கூட்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும்.
* சரும கறுப்பினை அகற்றும். எலுமிச்சை சாறுடன் சிறிது நீர் கலந்து மேலே தடவ சரும அடர் கருப்பு நீங்கும்.
* முகத்தில் தடவ சுருக்கங்கள் குறையும்.
* முகத்துவாரங்கள் சுருங்கும்.

தேங்காய் எண்ணையை சமையலில் சேர்க்க

* தைராய்டு செயல்திறன் கூடும்.
* மைக்ரேன் பாதிப்பு குறையும்.
* உதட்டில் தடவ உதடு வெடிப்பு குறையும்.
* சருமத்தில் தடவ சுருக்கம் குறையும்.

விளக்கெண்ணெய் :

* வறண்ட சருமத்தில் சிறிது நீர் சேர்த்து தடவ சருமம் மிருதுவாகும்.
* புருவம் இமைகளில் சிறிது தடவ இவை பலம் பெறும். 
முதுமையில் மறதி நோயினைத் தவிர்க்க உதவும் சில உணவுப் பொருட்கள்:

* பீன்ஸ், கோகோ, தேங்காய் எண்ணெய், மீன், கீரை வகைகள், கொட்டை வகைகள், ஆலிவ் எண்ணை, முழு தானியங்கள் ஆகும். கொத்தமல்லி தழை மற்றும் கொத்தமல்லி விதை (தனியா) இவற்றினை அன்றாடம் உணவில் சேருங்கள். வயிற்று உப்பிசம், அஜீரணம், உடல்வலி, பூஞ்சை பாதிப்பு உடல் துர்நாற்றம் இவை அனைத்தையும் நீக்க வல்லது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.