உணவுப்பொருள் கலப்படம்: இந்த சோதனையை உடனே செய்திடுங்கள்

உணவுப்பொருள் கலப்படம்: இந்த சோதனையை உடனே செய்திடுங்கள்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படங்கள் கலந்து உள்ளதா? என்பதை மிக எளிதில் கண்டுபிடிக்க சில சோதனைகள் இதோ..

பச்சைப்பட்டாணி

சிறிதளவு பச்சைப்பட்டாணியை ஒரு டம்ளரில் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது நேரத்திற்கு பின் கவனிக்க வேண்டும். அதில் செயற்கை கிருமிகள் இருந்தால், அவை தண்ணீரில் கரையும்.

மிளகாய்த்தூள்

ஒரு டம்ளர் நீரில் மிளகாய்த்தூளை போட்டு கவனிக்கும் போது, அது நீரின் மேற்பரப்பில் நின்றால் கலப்படம் இல்லை என்றும் அதுவே நீரில் கரைந்து இருந்தால், அது கலப்படம் கலந்தது என்று அர்த்தம்.

பால்

பாலில் உள்ள அதே அளவு தண்ணீரை ஒரு டம்ளர் தண்ணீரைக் கலந்து, நன்கு குலுக்க வேண்டும்.

அது சோப்புத்தூள் கலக்காத பால் என்றால் சிறியளவு நுரையும், சோப்புத்தூள் இருந்தால் அதிக அளவு நுரையும் பாலின் மேற்பரப்பில் தேங்கியிருக்கும்.

பாலின் ஒரு துளியை எடுத்து வழவழப்பான பரப்பில் விட்டு பார்க்கும் போது, நீர் கலக்காத பால் என்றால், அது சாய்வுப் பகுதியை நோக்கி மெதுவாக ஓடுவதுடன், அதன் வழிதடத்தில் பாலின் வடுவும் இருக்கும். அதுவே பாலில் நீர் கலந்து இருந்தால், அது விரைவாக ஓடுவதுடன், எந்த வடுவும் தென்படாது.

தேன்

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சொட்டு தேனை கலந்து கவனிக்க வேண்டும். அந்த தேன் சுத்தமானதாக இருந்தால் அது கரையாமல் நீருக்கு அடியில் இருக்கும். அதுவே கலப்பட தேனாக இருந்தால் நீரில் கரைந்துவிடும்.

தேங்காய் எண்ணெய்

சிறிய அளவு தேங்காய் எண்ணெய்யை ஒரு டம்ளரில் எடுத்து அதை ப்ரிட்ஜில் வைத்து, சில நொடிகள் கழித்து எடுத்து பார்க்கும் போது உறைந்திருந்தால் சுத்தமானது என்றும், உறையாமல் இருந்தால் கலப்படம் என்றும் அர்த்தம்.

தானியங்கள்

ஒரு டம்ளர் நீரில் தானியங்களை போட்டு பார்க்கும் போது மிதக்காமல் இருந்தால் சுத்தமானது என்றும், தண்ணீரில் மேலே வேறு நிறத்துடன் மிதந்தால் கலப்படம் கலந்தது எனவும் அர்த்தம்.

மிளகு

ஒரு டம்ளர் நீரில் சில மிளகுகளை போட்டு பார்க்கும் போது சுத்தமானதாக இருந்தால் நீரில் மூழ்கி அடியில் கிடக்கும். சுத்தமாக இல்லையெனில் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.

ராகி

காட்டன் பஞ்சை நீரில் நனைத்து ராகி போன்ற தானியங்களின் மீது லேசாக தேய்ப்பதன் மூலம் சுத்தமானது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

பருப்புகள்

கலப்படம் நிறைந்த பருப்பாக இருந்தால் அதை ஒரு வெள்ளை நிறம் கொண்ட கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு பார்க்கும் போது கலப்படங்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

அயோடின் உப்பு

ஒரு உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் மேற்பரப்பில் உப்பை தடவி, ஒரு நிமிடம் கழித்து அதில் சிறிதளவு எலுமிச்சையை சாற்றி விட வேண்டும்.

அப்போது அது சுத்தமான அயோடின் உப்பாக இருந்தால் அந்த உருளைக்கிழங்கு நீல நிறத்தில் மாறிவிடும்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தின் தோலை கூர்மையான கத்தி பயன்படுத்தி சுரண்ட வேண்டும். அதில் மெழுகு பூசப்பட்டிருந்தால், கத்தியோடு வருவதை கண்டுபிடித்து விடலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.