உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய Whiteboard இனை அறிமுகம் செய்யும் கூகுள்!

உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய Whiteboard இனை அறிமுகம் செய்யும் கூகுள்!

இணையத்தளத்தினை ஆக்கிரமித்து வரும் கூகுள் நிறுவனம் அதனையும் தாண்டி பல்வேறு கண்டுபிடிப்புக்களையும் உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக Google Jamboard எனும் புத்தம் புதிய Whiteboard ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில் எதிர்வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த Whiteboard ஆனது 4K தொழில்நுட்பத்துடன் கூடிய 55 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது.

மேலும் இதில் HD கமெரா, WiFi, Speakers என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 4,999 டொலர்கள் ஆகும்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான Microsoft Surface Hub உடன் ஒப்பிடும்போது 4,000 டொலர்கள் விலை குறைவாக இருக்கின்றது.

இதன் முழுமையான சிறப்பம்சங்கள்,

 • 55-inch 4K UHD display
 • 120 Hz touch scan rate / 60 Hz video refresh rate
 • 16 simultaneous touch points
 • Handwriting and shape recognition
 • Built-in tilt support / Built-in wide-angle camera
 • Down-firing speakers / Built-in microphones
 • NFC
 • HDMI 2.0, USB Type C, 2 X USB 3.0
 • SPDIF audio out
 • Wi-Fi 802.11ac 2×2 / 1 Gigabyte Ethernet
 • Google Cast
 • 2 x Fine tip passive stylus, Eraser, Microfiber cloth
 • Rolling stand is an additional accessory
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.