உலகின் அதிவேக ஸ்மார்ட்போன்: ஆப்பிள் உள்பட பிரபல நிறுவனங்களை முந்திய எச்.டி.சி.

உலகின் அதிவேக ஸ்மார்ட்போன்: ஆப்பிள் உள்பட பிரபல நிறுவனங்களை முந்திய எச்.டி.சி.

சர்வதேச ஸ்மார்ட்போன் பட்டியலில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி எச்.டி.சி. நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. எச்.டி.சி.யின் சமீபத்திய வெளியீடான யு11 ஸ்மார்ட்போன் உலகின் அதிவேக ஸ்மார்ட்போனாக இருப்பது தெரியவந்துள்ளது. 
 
அன்டுடு (AnTuTu)-வின் சர்வதேச ஸ்மார்ட்போன் பட்டியலில் எச்.டி.சி. யு11 ஸ்மார்ட்போன் 180079 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து எம்.ஐ. 6 ஸ்மார்ட்போன் 174299 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றுள்ளது. 
 
\"\"
 
 
மே 2017, வரையிலான காலகட்டத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் மே மாதம் வெளியாகாத ஒன்பிளஸ் 5 இடம்பெறவில்லை. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் எச்.டி.சி. யு11 இடம்பெற்றுள்ளது. 
 
ஐபோன்லேண்ட் அறிக்கையில் ஐபேட் ப்ரோ (9.7 இன்ச்) மற்றும் ஐபோன் 7 மாடல்களை பின்னுக்குத் தள்ளி ஐபோன் 7 பிளஸ் முதலிடம் பிடித்துள்ளது. இதிலும் சமீபத்திய ஆப்பிள் வெளியீடான A10X ஃபியூஷன் சிப்செட் கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்கள் இடம்பெறவில்லை. 
 
பட்டியலில் சாம்சங் கேலக்ஸி S8 மூன்றாவது இடத்திலும், கேலக்ஸி S8 பிளஸ் மற்றும் ஒன்பிளஸ் 3டி நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.