என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவில் பிரபலமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் ரக பைக் தயாரிப்பில் முக்கியத்துவம் அளிக்க இருக்கிறது. இதன் முதற்கட்டமாக அந்நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200 S அமைந்தது. இந்நிலையில், என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர் மாடல் பைக் ஒன்றை ஹீரோ தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அந்த வகையில் ஹீரோ நிறுவனம் தொடர்ந்து 200சிசி ரக பைக்களை இந்தயாவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய பைக் வடிவமைப்பு முழுமையாக தயாராகியுள்ளது என்றும், இந்த மாடல் உயர்-ரக ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்றும் இந்த பைக் அடுத்த நிதியாண்டின் மத்தியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
 
இத்துடன் புதிய என்ட்ரி-லெவல் மாடல் அட்வென்ச்சர் பைக் அல்லது ஆஃப்ரோடு மாடலாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. இந்தியாவி்ல் தற்சமயம் ஆஃப்ரோடு பைக்களுக்கான வரவேற்பு மிகவும் குறைவாக இருப்பதால், ஹீரோ நிறுவனத்தின் புதிய மாடல் என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
\"\"
 
முன்னதாக வெளியான தகவல்களில் இந்திய அட்வென்ச்சர் பைக் சந்தையில் விரைவில் ஹீரோ நிறுவனம் கால்பதிக்கும் என கூறப்பட்டது. அந்தவகையில், 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் புதிய அட்வென்ச்சர் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஹீரோ 200சிசி மாடலில் 200சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 18 bhp - 20 bhp செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆஃப்ரோடு மாடல் அதிக கிரவுண்ட்-கிலியரன்ஸ் மற்றும் அதிரடி தோற்றம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்திய பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் 3.52 சதவிகித பங்குகளை ஹீரோ கொண்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ 30 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.