எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் மஹேந்திரா

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் மஹேந்திரா

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹேந்திரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய சந்தைக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படும் மஹேந்திராவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கஸ்டோ தளம் சார்ந்திருக்கும் என கூறப்படுகிறது.

ஆட்டோகார் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் மஹேந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் வசதியை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.    

மஹேந்திரா குழும தலைவரான ஆனந்த் மஹேந்திரா சமீபத்திய ட்வீட்டில் புதிய எலெக்ட்ரிக் வாகனம் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மஹேந்திராவின் பூனே ஆலையில் இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதே ஆலையில் ஜாவா பிரான்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கஸ்டோ பிரான்டை தழுவி உருவாக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிடும் நிலையில், பல்வேறு இதர நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பெங்களூரை சேர்ந்த நிறுவனம் நாட்டின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருகிறது.    

\"\"

டிசம்பர் 2017 அல்லது ஜனவரி 2018-ம் ஆண்டு வாக்கில் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் S340 தயாரிப்பு பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இதரற்கன அர்பனைட் எனும் பிரான்டினை பஜாஜ் ஆட்டோ உருவாக்கியுள்ளது.

இதே போல் பூனேவை சேர்ந்த டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட T6X மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது. இத்துடன் டி.வி.எஸ். நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 

மத்திய அரசின் சமீபத்திய தகவல்களின் படி இந்தியாவில் 2030-ம் ஆண்டு வாக்கில் அனைத்து வாகனங்களும் மின்சாதன வசதி கொண்டிருக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலான வாகனங்களை தயாரிக்க விளம்பரம் செய்து வருகிறது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.