எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் V30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் V30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

எல்ஜி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே IFA 2017 விழாவில் புதிய எல்ஜி V30 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 6.0 இன்ச் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 16 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, கிரிஸ்டல் கிளியர் லென்ஸ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
 
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த எல்ஜி UX 6.0+ இயங்குதளம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள புதிய யூசர் இன்டர்ஃபேஸ் குவால்காம் அகௌஸ்டிக் வாய்ஸ் வாய்ஸ் ரெக்கஃனீஷன், ஃபேஸ் ரெக்கஃனீஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
 
 
\"\"
 
எல்ஜி V30 சிறப்பம்சங்கள்:
 
 
- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே
- 538 PPI, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி / எல்ஜி V30+ 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த எல்ஜி UX 6.0+
- 16 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.6 அப்ரேச்சர், டூயல்டோன் எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- 3,300 எம்ஏஎச் பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0
- வயர்லெஸ் சார்ஜிங்
 
\"\"
 
மெட்டல் ஃபிரேம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படும் எல்ஜி V30 IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு உகந்த வகையில் 14 தர சான்றுகளை எல்ஜி V30 வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
 

 

புதிய எல்ஜி V30 ஸ்மார்ட்போன் ஔரா பிளாக், கிளவுட் சில்வர், மொரோக்கான் புளூ மற்றும் லேவென்டர் வைலட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக கொரியாவில் செப்டம்பர் 21-ம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.