எளிய தோட்டக்கலை குறிப்புகள்

எளிய தோட்டக்கலை குறிப்புகள்

வீட்டு எஜமானிகளுக்கு தோட்டங்கள் அமைப்பதில் அலாதி பிரியம் உண்டு, அதனை பராமரிப்பது பெரும்பாலானவர்களுக்கு முழுநேர பொழுதுபோக்காக கூட மாறிவிடும்.

இதற்காக செயற்கையான ரசாயனங்களை பயன்படுத்தாமல், மிக எளிதாக வீட்டு பொருட்களை கொண்டே தோட்டங்களுக்கு உரமிடலாம்.

முட்டை ஓடு

முட்டை ஓடுகளில் கால்சியம் அதிகம் உள்ளது, எனவே முட்டை ஓடுகளை உலர வைத்த பின்னர் அதனை நொறுக்கி தோட்டத்தில் உரமாக பயன்படுத்தலாம்.

எப்சம் உப்பு

மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்கள் அதிகம் கொண்டஎப்சம் உப்பு தாவரங்கள் நன்கு வளர உதவி புரிகிறது. தக்காளி மற்றும் மிளகாய் செடிகளில் நல்ல பலனை காணலாம்.

பால் பவுடர்

இது கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும், தக்காளி செடிகளுக்கு நல்ல பலனை தருவதாக பலராலும் நம்பப்படுகிறது.

வெள்ளரிக்காய்

இனிமையான வெள்ளரிக்காயை ருசிக்க வேண்டும் என்றால் இதனை சூரியகாந்தி செடிக்கு அருகில் நட்டு வைக்க வேண்டும். இவை இரண்டிற்கும் ஒரே மண்போதும் என்பதால் செழிப்பாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

சமையல் கழிவுநீர்

சமைக்கும் போது பயன்படுத்தப்பட்ட கழிவ நீர், காய்கறிகள் வேக வைகப்பட்ட நீரை கீழே ஊற்றாமல் செடிகளுக்கு பயன்படுத்தினால் நல்ல பலனை காணலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.