ஏர்டெல் அதிவேக இண்டர்நெட் வழங்குகிறதா? விளம்பர கவுன்சிலில் புகார் அளித்த ஜியோ

ஏர்டெல் அதிவேக இண்டர்நெட் வழங்குகிறதா? விளம்பர கவுன்சிலில் புகார் அளித்த ஜியோ

\'இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அதிவேக இண்டர்நெட் வழங்குகிறது என கோரும் ஏர்டெல் விளம்பரங்கள் முற்றிலும் பொய், தவறாக வழிநடத்துகிறது மற்றும் பிழையான ஒன்று\', என ரிலையன்ஸ் ஜியோ இந்திய விளம்பர கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. இண்டர்நெட் வேகத்தை நிர்ணயிக்க ஊக்லா நடத்திய முறைகளில் பிழை உள்ளது, இது தொடர்பாக ஊக்லா நிறுவனத்திற்கும் ஜியோ சார்பில் சட்டப்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.   
 
\'ஏர்டெல் விளம்பரங்களில் அதிகார்ப்பூர்வமாக அதிவேக நெட்வொர்க் (Officially The Fastest Network) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊக்லா என்பது வணிகம் சார்ந்து இயங்கும் பணத்திற்காக விருது வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்படாத ஒன்று ஆகும். அதிகாரப்பூர்வமாக (officially) என்ற வார்த்தை பயன்படுத்தும் போது டிராய் அல்லது தகவல் தொலைதொடர்பு துறையை மட்டுமே குறிக்கும்\', என ஜியோவின் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
\"\"
 
மேலும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை ஏர்டெல் நிறுவனம் வெளியிட தடை விதிக்கவும், அதிகாரப்பூர்வமாக என்ற வார்த்தையை ஏர்டெல் பிரான்டுடன் சம்பந்தப்படுத்தியோ அல்லது ஊக்லா அறிவித்துள்ளதாகவோ குறிப்பிடக்கூடாது என ரிலையன்ஸ் ஜியோ இந்திய விளம்பர கவுன்சிலிடம் கேட்டு கொண்டுள்ளது.   
 
ஜியோ குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள ஏர்டெல், \'இந்தியாவின் அதிவேக மொபைல் நெட்வொர்க் என ஊக்லா தேர்வு செய்துள்ளது, ஊக்லா நிறுவனம் பிராட்பேண்ட் சோதனை மற்றும் இணையம் சார்ந்த சேவைகளை வழங்குவதில் உலக பிரபலமானது. விளம்பரங்களில் இவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது\', என தெரிவித்துள்ளது. 
 
பல்வேறு ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களில் இருந்து இண்டர்நெட் வேகத்தை சரிபார்க்க ஊக்லா தளத்தை பயன்படுத்தியவர்களின் தரவுகளில் இருந்தே ஏர்டெல் அதிவேக இண்டர்நெட் வழங்குகிறது என கண்டறியப்பட்டது என ஊக்லா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.