ஒன்பிளஸ் 6 வடிவமைப்பிற்கு இதான் காரணம் - மனம் திறந்த ஒன்பிளஸ் அதிகாரி

ஒன்பிளஸ் 6 வடிவமைப்பிற்கு இதான் காரணம் - மனம் திறந்த ஒன்பிளஸ் அதிகாரி

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் நாட்ச் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X போன்று முன்பக்கம் நாட்ச் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்ற வடிவமைப்பு புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படுவதற்கான காரணத்தை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ அறிவித்துள்ளார்.
 
வழக்கமான வடிவைப்பில் முன்பக்கம் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் ஐபோன் X போன்ற நாட்ச் தற்சமயம் சாத்தியமான ஒற்றை தீர்வாக இருக்கிறது என பீட் லௌ தெரிவித்துள்ளார். புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு அதாவது மே அல்லது ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
முன்பக்கம் டாப் பெசல்களில் அதிகப்படியான பாகங்கள் இடம்பெறாது என்பதால் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதேபோன்ற வடிவமைப்பு சமீபத்தில் அறிமுகமாகும் பெரும்பாலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுகிறது என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரியின் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
 
 
தற்போதைய ஸ்மார்ட்போன்களில் பாப்-அவுட் போன்ற கேமரா தொழில்நுட்பம் சாத்தியமற்றது என்பதால் முன்பக்க நாட்ச் செல்ஃபி கேமராவிற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. தற்சமயம் செல்ஃபி கேமரா சிறப்பான இடத்தில் இருப்பதோடு, ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சத்தை சிறப்பாக பயன்படுத்த வழி செய்யும் படி உள்ளது என பீட் லௌ தெரிவித்துள்ளார்.
 
இத்துடன் ஒன்பிளஸ் 6 டிஸ்ப்ளேக்கள் நாட்ச் போன்ற வடிவமைப்பிற்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதாக பீட் லௌ தெரிவித்துள்ளார். இவை டிஸ்ப்ளேக்களின் ஒவ்வொரு அம்சத்திலும் திறம்பட பிரதிபலிக்க ஏற்றதாக இருக்கும். அசுஸ் மற்றும் ஹூவாய் போன்ற உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களால் ஒன்பிளஸ் இதுபோன்ற டிஸ்ப்ளேக்களை வழங்க முடிகிறது.
 
டிஸ்ப்ளே மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் நாட்ச்-சார்ந்த இயங்குதளத்தை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. இவற்றில் நோட்டிபிகேஷன்கள் மற்றும் இதர ஷார்ட்கட்கள் சீராக இயங்கும் படி ஆக்சிஜன் ஓஎஸ் மேம்படுத்தப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.