ஒரே நாள்.. முகத்தில் உள்ள அழுக்கை முழுமையாக போக்கலாம்

ஒரே நாள்.. முகத்தில் உள்ள அழுக்கை முழுமையாக போக்கலாம்

முகத்தின் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், சரும சுருக்கம், பொலிவிழந்த முகம் போன்ற பிரச்சனைகளை தடுக்க அற்புதமான வழிகள் இதோ!

வெங்காயம் தேன் மாஸ்க்

1 வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது தேன் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும்.

பூண்டு முட்டை மாஸ்க்

1 டீஸ்பூன் வெண்ணிற களிமண், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

ப்ளம்ஸ் மாஸ்க்

ப்ளம்ஸ் பழத்தை அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பாதாம் தேன் மாஸ்க்

2 டீஸ்பூன் பாதாம் பொடியுடன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.

ஆப்பிள் மாஸ்க்

1/2 ஆப்பிளை அரைத்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.