ஒற்றை சார்ஜில் 23 நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் Mi பேண்ட் HRX எடிஷன் அறிமுகம்

ஒற்றை சார்ஜில் 23 நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் Mi பேண்ட் HRX எடிஷன் அறிமுகம்

சியோமி நிறுவனமும் பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இணைந்து இந்தியாவில் HRX எடிஷன் Mi பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய Mi பேண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 23 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் மேம்படுத்தப்பட்ட டிரக்கிங் அல்காரிதம் மற்றும் நீர்துளிகளை தாங்கும் திறன் கொண்டுள்ளது.

இந்தியாவில் புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Mi பேண்ட் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட்- HRX எடிஷன் சியோமியின் Mi பேண்ட் 2 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இரண்டாம் காலாண்டு வாக்கில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட் சாதனமாக Mi பேண்ட் 2 இருப்பதாக ஐ.டி.சி. சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.டி.சி.யின் அறிக்கையின் படி அணியக்கூடிய சாதனங்கள் பட்டியலில் 13.4 சதவிகித பங்குகளுடன் உலகின் முன்னணி இடத்தில் சியோமி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

\"\"

ரித்திக் ரோஷன் எடிஷனின் முக்கிய அம்சமாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கிறது. அந்நிறுவன ஆய்வுகளில் Mi பேண்ட் ஒரு முறை சார்ஜ் செய்ததில் 23 நாட்களுக்கு பேக்கப் வழங்கியது தெரியவந்துள்ளது. புதிய Mi பேண்ட் குறைந்த மின் அளவை பயன்படுத்தும் ப்ளூடூத் 4.0 சிப்செட் மற்றும் OLED டிஸ்ப்ளேவினை பயன்படுத்துகிறது. 

சாதாரண பயன்பாடுகளில் Mi பேண்ட் சாதனம் ஒருமுறை சார்ஜ் செய்தாலே ஒரு மாதம் வரை பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. புதிய பேண்ட் சாதனம் மிதியடி கணக்கு, உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள், உறக்க அளவுகள் சார்ந்த தகவல்களை கண்காணிப்பதோடு அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கான நோட்டிபிகேஷன்களை டிஸ்ப்ளேவில் காண்பிக்கும்.

மிக குறைந்த எடை கொண்டுள்ள புதிய Mi பேண்ட் கையில் எளிமையாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Mi பேண்ட் மெல்லிய வடிவமைப்பு மற்றும் ஹைபோஅலர்ஜெனிக் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் IP67 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதனால் மழையிலும் இந்த சாதனம் சீராக வேலை செய்யும். 

\"\"

இத்துடன் புதிய Mi பேண்ட் HRX எடிஷன் போனினை அன்லாக் செய்யும் வசதி, அழைப்புகளை ஏற்பது மற்றும் செயலிகளுக்கான அலெர்ட்களை பெற முடியும். கருப்பு நிறத்தில் கிடைக்கும் Mi பேண்ட் HRX எடிஷன் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் வாங்கிட முடியும். 

ப்ளிப்க்ராட், அமேசான் மற்றும் மிந்த்ரா போன்ற ஆன்லைன் தளங்களில் வாங்க விரும்புவோர் செப்டம்பர் 20-ம் தேதி முதல் Mi பேண்ட் சாதனத்தை வாங்கிடம முடியும். இதனை வாங்கும் முன்பே சோதனை செய்ய விரும்புவோர் செப்டம்பர் 18-ம் தேதி முதல் Mi ஹோம் ஸ்டோர் சென்று பயன்படுத்தி பார்க்க முடியும். சியோமியின் Mi.Com தளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் Mi பேண்ட் வாங்கிட முடியும் என சியோமி அறிவித்துள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.