கற்றாழை... ஜாதிக்காய்... தேன்.... முகப் பொலிவு தரும், கரும்புள்ளிகளைப் போக்கும்!

கற்றாழை... ஜாதிக்காய்... தேன்.... முகப் பொலிவு தரும், கரும்புள்ளிகளைப் போக்கும்!

ரும்புள்ளிகள்... இன்றைய இளம்வயதினரை அதிக பாதிப்புக்குள்ளாக்கும் சருமப் பிரச்னைகளில் ஒன்று. கரும்புள்ளிகள் பொதுவாக மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடியவை. கரும்புள்ளிகள் உள்ள இடத்தைப் பார்த்தால் கறுமை நிறத்துடன் ஆரோக்கியமற்ற இடம் போன்று காணப்படும். இவற்றுக்கு முக்கியக் காரணம், சருமத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அந்த இடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கறுமையாக மாறும். சிலர் முகத்தில் வரக்கூடிய பருக்களை கையால் கிள்ளி எடுக்க முயல்வார்கள். அதனால் சருமத்துளைகளில் அழுக்குகள் தங்கி சிறு சிறு கறுமையான கட்டிகள் உருவாகும். மேலும் ஊட்டச்சத்துக்குறைவு, மலச்சிக்கல் போன்ற காரணங்களாலும்கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எனவே  ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் நார்ச்சத்துள்ள உணவுகளையும் சரிவிகிதமாக சேர்த்துக்கொண்டால் இவை ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ராதிகா.

\"கரும்புள்ளி\"

முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளைப் போக்க ராதிகா சொல்லும் ஆலோசனைகள்... \"ராதிகா\"

1. கரும்புச் சாறு

கரும்புச் சாறு கரும் புள்ளிகளை நீக்க உதவும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்... கரும்புச் சாறுடன் எலுமிச்சைச்சாறு, மைதா சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். இதை தினமும் செய்துவந்தால் முற்றிலும் நீங்கும். 

2. ஜாதிக்காய்

ஜாதிக்காய்த்தூளுடன் சந்தனத்தூள், சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மட்டும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் அவை நீங்கிவிடும்.

\"கற்றாழை

3. கற்றாழை

கற்றாழை கரும்புள்ளிகளைப் போக்க உதவும். மிகவும் அற்புதமான அழகுப் பராமரிப்புப் பொருளாகும். கற்றாழையுடன் பிளீச்சிங் தன்மை கொண்ட எலுமிச்சைச்சாறையும் சேர்த்து தினமும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் கருமை நீங்கி சருமம் மென்மையாகவும், வறட்சியில்லாமலும் இருக்கும்.

4. முல்தானி மெட்டி

கரும்புள்ளியைப் போக்குவதில் முல்தானி மெட்டிக்கு முக்கியப் பங்குண்டு. முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பேஷ்பேக் போல போடவேண்டும். நன்றாக காயவிட்டு பிறகு கழுவ வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

5. தேன்

கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும் சருமத்தை இறுக்குவதற்கும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. ஆகவே இதை தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவி வந்தால் பலன் கிடைக்கும்.

\"தண்ணீர்\"

6. தண்ணீர்

தண்ணீரை தினமும் குறைந்தது 6 முறை குடித்து வருவதன்மூலம், உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். மேலும் தினமும் முகத்தை 3 முறையாவது தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் உள்ள கிருமிகள் வெளியேறுவதோடு, சருமம் ஈரப்பசையுடனும் பொலிவுடனும் இருக்கும்.

7. பழச்சாறு

கேரட் மற்றும் ஆரஞ்சுப்பழச் சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் தினமும் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.

\"முகப்

8. டீ ட்ரி 

 டீ டிரி எண்ணெய், கற்றாழைச்சாறு, லாவெண்டெர் ஆயில் தலா ஒரு துளி சேர்த்து முகத்தில் பேஸ் மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, கரும்புள்ளிகளைப் போக்கிவிடும். இதை 20 நிமிடங்கள் செய்துவர காலப்போக்கில் கரும்புள்ளிகளின் நிறம் மாறி மறைந்து விடும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.