கார் ரியர் வியூ கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்ய ஐந்து டிப்ஸ்

கார் ரியர் வியூ கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்ய ஐந்து டிப்ஸ்

கார் பணங்களின் போது ஏர்பேக் போன்று மிகவும் அவசியமான ஒன்று ரியர் வியூ கண்ணாடிகள் தான். கார் ஓட்டும் போது பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய அங்கமாக ரியர் வியூ கண்ணாடிகள் இருக்கிறது. இவற்றை சரியாக அட்ஜஸ்ட் செய்யாமல் இருப்பது ஆபத்தில் முடியவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. 
 
ரியர் வியூ கண்ணாடிகளை பயன்படுத்தாமல் பெரும்பாலானோரும் பெரும் தவறு செய்கின்றனர். கார் ரியர் வியூ கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்ய ஐந்து டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம். 
 
 
கண்ணாடிகளை புரிந்து கொள்வது
 
 
பெரும்பாலான ரியர் வியூ கண்ணாடிகளில் எச்சரிக்கை வாசகம், \'கண்ணாடியில் தெரியும் பொருட்கள் நிஜத்தில் அருகில் இருக்கும்\' (OBJECTS ARE CLOSER THAN THEY APPEAR IN THE MIRROR) சாலை பாதுகாப்பை உறுதி செய்ய ரியர் வியூ கண்ணாடிகளை காரில் உட்கார்ந்ததும் அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டும். 
 
\"\"
 
சென்ட்ரல் ரியர் வியூ கண்ணாடி:
 
காரின் பின்புறத்தில் உள்ள விண்ட்ஸ்கிரீன் கண்ணாடியை முழுமையாக பார்க்கும் படி சென்ட்ரல் ரியர் வியூ கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். மேலும் ஓட்டுநர் தனது கண்களை அசைத்தாலே சென்ட்ரல் ரியர் வியூ கண்ணாடியை பார்க்க முடியும் படி அது இருக்க வேண்டும். 
 
 
அட்ஜஸ்ட்மென்ட்:
 
 
சென்ட்ரல் ரியர் வியூ கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்யும் போது கண்ணாடியில் கைவிரல்கள் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். கைவிரல் ரேகைகள் கண்ணாடியில் படும் போது பின்புறம் வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாமல் போகும். சில வெளிநாடுகளில் ரியர் வியூ கண்ணாடிகளை சரியாக அட்ஜஸ்ட் செய்யாமல் போனால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது.
 
 
\"\"
 
அவுட்சைடு ரியர் வியூ கண்ணாடி (ORVM):
 
 
காரின் பக்கவாட்டில் இருப்பதை தெளிவாக காட்டும் அவுட்சைடு ரியர் வியூ கண்ணாடிகள் காட்டும். இவற்றை அட்ஜஸ்ட் செய்யும் போது ஓட்டுநர் தனது தலையை நேராக வைத்துக் கொண்டு வலது புறத்தில் சிறிய பாகம் மட்டும் தெரியும் படி செட் செய்ய வேண்டும். இவ்வாறு செட் செய்யும் போது கண்ணாடி சாலையை ஆக்கிரமிக்காமல் இருக்கும். 
 
 
பிளைன்ட் ஸ்பாட்:
 
 

 

காரின் ரியர் வியூ கண்ணாடிகளை பிளைன்ட் ஸ்பாட் கண்ணாடிகளாக மாற்றலாம். இவ்வகை கண்ணாடிகள் காரின் பக்கவாட்டுகளில் இருப்பதை தெளிவாக காட்டும். இவ்வகை கண்ணாடிகள் அனைத்து கார் உபகரணங்கள் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.