கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் நேற்று (அக்டோபர்-4) சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் வெளியிட்ட பிக்சல் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். சாம்சங் கேலக்ஸி நோட் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

\"\"

கூகுள் பிக்சல் 2 சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச், 1920x1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, EIS, f/1.8 அப்ரேச்சர்
- 1.4μm பிக்சல், லேசர் + டூயல் பிக்சல் ஃபேஸ் டிடெக்ஷன்
- 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 1.4μm
- கைரேகை ஸ்கேனர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2700 எம்ஏஎச் பேட்டரி

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் கின்டா புளூ, ஜஸ்ட் பிளாக் மற்றும் கிளியர்லி வைட் நிறங்களில் கிடைக்கிறது. அமெரிக்காவில் 64 ஜிபி பிக்சல் 2 ஸ்மார்ட்போன் 649 டாலர்கள், 128 ஜிபி 749 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

\"\"

பிக்சல் 2 XL சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச், 2880x1440 பிக்சல் குவாட் எச்டி +pOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி
- மெமரியை கூடுதலாக நிட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, EIS, f/1.8 அப்ரேச்சர்
- 1.4μm பிக்சல், லேசர் + டூயல் பிக்சல் ஃபேஸ் டிடெக்ஷன்
- 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 1.4μm
- கைரேகை ஸ்கேனர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3520 எம்ஏஎச் பேட்டரி

\"\"

கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக், பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. அமெரிக்காவில் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் 849 டாலர்களும், 128 ஜிபி மாடல் 949 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் ரூ.61,000, 128ஜிபி பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.70,000 மற்றும் பிக்சல் 2 XL 64 ஜிபி மாடல் ரூ.73,000 மற்றும் பிக்சல் 2 XL 128 ஜிபி மாடல் ரூ.82,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் 1000க்கும் அதிகமான விற்பனை மையங்களில் அக்டோபர் 26-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.

பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 1-ம் தேதியும், பிக்சல் 2 XL ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 15-ம் தேதி முதல் துவங்குகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.