கூல்பேட் நோட் 5 லைட் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

கூல்பேட் நோட் 5 லைட் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

கூல்பேட் நிறுவனத்தின் நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வெளியான கூல்பேட் நோட் 5 ஸ்மார்ட்போனின் பேசிக் போனாக புதிய ஸ்மார்ட்போன் அமைந்துள்ளது. புதிய கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் மார்ச் 21 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
 
சிறப்பம்சங்களை பொருத்த வரை கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ சார்ந்த கூல் யூசர் இன்டர்ஃபேஸ் 8.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
இத்துடன் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6735CP சிப்செட், 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.   
 
4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் கூல்பேட் நோட் 5 லைட் இந்தியாவில் ரூ.8,199 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.