கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைந்தள்ளது

கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைந்தள்ளது

கே.டி.எம். இந்தியா இருசக்கர வாகனங்களின் ஜி.எஸ்.டி.-க்கு பிந்தைய விலை பட்டியல் சார்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
புதிய விலை பட்டியலில் கே.டி.எம். மோட்டார் சைக்கிள்களின் 350 சிசி-க்குட்பட்ட மாடல்களான டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்.சி. 200 உள்ளிட்ட மாடல்களின் விலையில் ரூ.8,600 வரை குறைந்துள்ளது. இதேபோல் 350 சிசி-க்கு அதிகமான மாடல்களான கே.டி.எம். 390 டியூக் மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலையில் ரூ.5,900 குறைந்துள்ளது. 
 
புதிய விலை பட்டியல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி.க்கு பிந்தைய வாட் வரிகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. புதிய ஜி.எஸ்.டி. வரிமுறை இந்தியாவில் ஜூலை 1-ந்தேதி முதல் அமலாகியுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு பிந்தைய விலை பட்டியலுடன் புதிய விலை பட்டியலையும் கே.டி.எம். நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய விலை பட்டியல் ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறுபடும்.
 
\"\"
 
ஒவ்வொரு மாடலையும் பார்க்கும் போது 2017 கே.டி.எம். 390 டியூக் சில மாநிலங்களில் விலை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் ரூ.2,26,358 விலையில் விற்பனை செய்யப்படும். இதேபோல் கே.டி.எம். 250 டியூக் முந்தைய விலையில் இருந்து ரூ.4,424 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.1,77,424 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
கே.டி.எம். 200 டியூக் தற்சமயம் ரூ.4,063 அதிகரிக்கப்பட்டு ரூ.1,47,563 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கே.டி.எம். ஆர்.சி. 200சிசி இனி ரூ.4,787 அதிகரிக்கப்பட்டு இனி ரூ.1,76,527-க்கு விற்பனை செய்யப்படும். கே.டி.எம். ஆர்.சி. 390 இனி ரூ.2,31,097 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையில் இருந்து ரூ.5,797 அதிகம் ஆகும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.