கை விரல்களுக்கு அழகு தரும் மசாஜ்

கை விரல்களுக்கு அழகு தரும் மசாஜ்

பொதுவாக தலை, கழுத்து போன்ற பகுதிகளில் தான் மசாஜ் செய்வோம். ஆனால் கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வதால் உடல் ரிலாக்ஸாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

இதற்காக பார்லருக்கு போய் தான் மசாஜ் செய்ய வேண்டும் என்பதில்லை. இந்த மசாஜை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் ரிலாக்ஸ் ஆக இருக்கும் போது இந்த மசாஜை செய்யலாம்.

முதலில் சிறிது எண்ணெய்யையோ அல்லது கைகளுக்கு தடவும் லோஷனையோ கைகளில் தடவவும். பின் மெதுவாக அந்த எண்ணெய் அல்லது லோஷனை தோலில் ஊடுருவு‌ம் வரை ந‌ன்கு மசா‌ஜ் செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

\"\"

அதன் பிறகு வைட்டமின் ஈ உள்ள எண்ணெய்யை எடுத்து கை, விரல்களில் தடவி மசாஜ் செய்யவும். முக்கியமாக மணிக்கட்டு, உள்ளங்கை ஆகிய இடத்தில் நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டு விட்டு செய்ய வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்வதால் விரல்களில் இருக்கும் நரம்புகள், மணிக்கட்டுகளில் இணைவதால் மணிக்கட்டில் மசாஜ் செய்வது புத்துணர்ச்சியைத் தரும்.

மேலும் கை ‌விர‌ல்க‌ள் அழகாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் அவ‌ற்று‌க்கு நெய்ல் பாலிஷ் அடி‌த்தா‌ல் மட்டும் போதாது இந்த மாதிரியான மசாஜை செய்து முறையாக‌ப் பராம‌ரி‌‌த்து வ‌ந்தா‌ல் தா‌ன் நக‌ங்களு‌ம் அழகாக‌வும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.