சண்டே ஹோலி ஸ்பெஷல்: மட்டன் கீரின் மசாலா

சண்டே ஹோலி ஸ்பெஷல்: மட்டன் கீரின் மசாலா

சண்டே ஸ்பெஷல் மட்டன் கிரீன் மசாலா ரெசிபி. இதை எவ்வாறு செய்யலாம் எனக் காணலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் -1/2 கிகி

புதினா - 1 கப்

இஞ்சி - 1 இஞ்ச்

சீரகம் - 1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - 2 இஞ்ச்

வெங்காயம் -3

உப்பு - சுவைக்கேற்ப

உருளைக்கிழங்கு - 1

தண்ணீர் - தேவையான அளவு

புளிக்கரைசல் - சுவைக்கேற்ப

கொத்தமல்லி இலை - 2 கப்

பச்சை மிளகாய் - 2 கப்

பூண்டு -6

கிராம்பு - 7

கசாகசா- 2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 1 கப்

தக்காளி - 1

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 7

செய்முறை

துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை, சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகுத்தூள், பூண்டு, மஞ்சள்தூள். பச்சை மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த பச்சை மசாலா, உப்பு, நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வேக வைக்கவும்.

அதே அடுப்பில் ஃபிரஷர் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மட்டன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் விடவும்.

மட்டன் வெந்ததும் பச்சை மசாலாவுடன் சேர்த்து வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

மட்டன் கீரின் மசாலா தயாரானதும் அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு அடுப்பை அணைக்கவும்.

மட்டன் கீரின் மசாலா ரெடி!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.