சத்து நிறைந்த கார்ன் - குடமிளகாய் சாலட்

சத்து நிறைந்த கார்ன் - குடமிளகாய் சாலட்

தேவையான பொருட்கள் : 

சோளம் - 1, 
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு, 
வெங்காயம் - 1
தக்காளி - 1, 
சின்ன குடமிளகாய் -  1, 
பச்சை மிளகாய் - 1, 
கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு - சிறிதளவு.

\"\"

செய்முறை : 

* சோளத்தை வேகவைத்து நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். 

* வெங்காயம், தக்காளி, குடமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் உதிர்த்த சோளத்துடன் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகுத்தூள், குடமிளகாய், ப. மிளகாய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 

* சத்து நிறைந்த கார்ன் - குடமிளகாய் சாலட் ரெடி.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.