சாம்சங் ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ விலை முறையே ரூ.17,900 மற்றும் ரூ.20,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் ஜூன் 20-ந்தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், ஜெ7 ப்ரோ விற்பனை ஜூலை மாத மத்தியில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 120 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
 
சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
 
 
\"\"
 
* 5.7 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே
* மீடியாடெக் ஹீலியோ P20 ஆக்டாகோர் பிராசஸர்
* 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 13 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ் 
* 13 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ்
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
 
 
சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
 
 
\"\"
 
* 5.5 இன்ச் ஃபுல்-எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* எக்சைனோஸ் 7870 ஆக்டா கோர் பிராசஸர்
* 3 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 3600 எம்ஏஎச் பேட்டரி
* டூயல் சிம் ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
* 4ஜி எல்டிஇ, IP54 ஸ்ப்ளாஷ் ப்ரூஃப்
 
சாம்சங் கேலக்ஸி S8, மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்ட சாம்சங் பே சேவை புதிய ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் யு.பி.ஐ. முறையில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யலாம்.  
 

 

கேலக்ஸி ஜெ7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் மெல்லிய மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, முன்பக்க ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.