சிட்டிசன் அப்டேட்ஸ்!

சிட்டிசன் அப்டேட்ஸ்!

ஹோண்டா பிராண்டுக்கு முன்புபோல கிரேஸ் உள்ளதா? CR-V, அக்கார்டு, சிவிக் என கெத்து காட்டிய பிராண்டுதான் இப்போது பிரியோ, அமேஸ், மொபிலியோ என அடுத்த லெவல் கார்களை விற்பனை செய்துகொண்டிருக்கிறது. தன் பிராண்டு இமேஜை உயர்த்தும் முக்கிய முயற்சியாக, சிட்டி பேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. பேஸ்லிஃப்ட் மாடலில் ZX பெட்ரோல் என புதிய டாப் எண்ட் வேரியன்ட்டும் வந்துள்ளது. விலைக்கேற்றவாறு பிராண்ட் இமேஜும் உயர்ந்துள்ளதா?

\"\"

வெளிப்புற டிசைனைப் பொறுத்தவரை, புதிய கிரில்லும் ஷார்ப்பான பம்பர் டிசைனும் அசத்தலாக இருக்கின்றன. விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக காரின் அடிப்படைத் தோற்றத்தில் மாற்றங்கள் செய்யவில்லை ஹோண்டா.  ZX வேரியன்ட்டில் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படும் LED ஹெட்லைட்களும், LED டே டைம் ரன்னிங் லைட்டுகளும் செம ஸ்டைலிஷ். ஃபாக் லேம்ப்ஸ், டெயில் லைட்ஸ்,  பூட் ஸ்பாய்லரில்  அமைக்கப்பட்டுள்ள பிரேக் லைட், மிரர் இண்டிகேட்டர்கள், உள்பக்கம் உள்ள லைட்டுகள் ஆகிய அனைத்திலும் LED பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிட்டி பேஸ்லிஃப்ட்டின் உள்பக்கத்திலும் தரத்தை உயர்த்தியிருக்கிறது ஹோண்டா. V, VX மற்றும் ZX வேரியன்ட்டுகளில் வந்திருக்கும் புதிய Digipad இன்போடெயின்மென்ட் சிஸ்டம் செம கெத்து. 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. வை-ஃபை, MirrorLink ஸ்மார்ட்போன் சிஸ்டம், சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. டேஷ்போர்டில் சாஃப்ட் டச் பிளாஸ்டிக்ஸ் சேர்க்கப் பட்டுள்ளன. பியானோ-பிளாக் ஃபினிஷ், லெதர் இருக்கைகள், ஒன்-டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை சூப்பர்! 

அதே 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் இன்ஜின்கள்தான். 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் 100bhp சக்தியையும் 20.4 kgm டார்க்கையும் வெளியிடுகிறது. குறைந்த rpm-களில் பெர்ஃபாமென்ஸ் சூப்பராக இருக்கிறது. பவர் டெலிவரி சீராக இருந்தாலும், அதிக rpm-களில் அதிக சத்தம். முன்பைவிட இன்சுலேஷன் அதிகம் இருந்தாலும், சத்தம் வெளியே கேட்கவே செய்கிறது. 

\"\"

1.5 லிட்டர் பெட்ரோல் i-VTEC இன்ஜின் 119 bhp சக்தியையும் 14.5 kgm டார்க்கையும் அளிக்கிறது. ஸ்போர்ட்டியாக ஓட்ட விரும்புபவர்களுக்கு இதுவே சரியான சாய்ஸ். டீசலுக்கு 6-ஸ்பீடு மேனுவல், பெட்ரோலுக்கு 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் CVT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உள்ளன.

டாப் வேரியன்ட்ஸுக்கு இப்போது 185/55 R16 டயர்களுடன் 16-இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லோ ப்ரொஃபைல் டயர்களால் ஓட்டுதல் தரத்தில் பிரச்னை இல்லை. கிரிப்பும் அதிகரித்திருக்கிறது. இப்போது டூயல் ஃப்ரன்ட் காற்றுப்பைகள், ABS, EBD என பாதுகாப்பு வசதிகளும் அதிகம். ZX வேரியன்ட்டில் கூடுதலாக சைடு மற்றும் கர்ட்டன் காற்றுப்பைகள் கொடுக்கப் பட்டுள்ளன. 

எல்லாம் ஓகே! ஆனால், ZX வேரியன்ட்டின் விலை இப்போது அடுத்த செக்மென்ட்டான ஹூண்டாய் எலான்ட்ராவின் என்ட்ரி லெவல் விலைக்குச் சென்றுவிட்டது. சியாஸைவிட 5 லட்சம் ரூபாய் விலை அதிகம். ஹூண்டாய் வெர்னாவைவிட 1.5 லட்சம் ரூபாய் விலை அதிகம். சிட்டி காருக்கு இவ்வளவு விலை கொடுக்கத் தயாரா என்பது, சிட்டிசன்கள் சொல்ல வேண்டிய பதில்! அப்போதுதான் ஹோண்டா பிராண்டு இமேஜைப் பற்றித் தெரியும்!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.