சிறுநீரை அதிக நேரம் அடக்குவதால் ஏற்படும் உடல் உபாதைகள்

சிறுநீரை அதிக நேரம் அடக்குவதால் ஏற்படும் உடல் உபாதைகள்

நமது சிறுநீரக பை 400-500 மில்லி லிட்டர் அளவு வரையிலான சிறுநீரை மட்டுமே தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
 
எனவே சிறுநீரை அதிகமாக அடக்கும் போது, பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். அதனால் சில குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றி விடுவது மிகவும் அவசியமாகும்.
 
ஆனால் இந்த கால இடைவேளை ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்து மாறுபடும். 
 
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களின் உடலில் சிறுநீரை அடக்கும் திறனை இழந்து விடுவதால் அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.
 
அதேபோல் கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப்பை சிறுநீரக பையை முட்டுவதால் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.
 
சிறுநீரக பையில் நீண்ட நேரமாக சிறுநீரை அடக்கி வைத்தால், நோய் தொற்று கிருமிகள் உருவாகி சிறுநீரகப் பை மற்று குழாய்களில் பரவுவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்.
 
சிறுநீர் குழாய்கள் மூலமாக கிருமிகள் பரவி கிட்னியை பாதித்து, சிறுநீரகத்தின் செயல்பாட்டை செயலிழக்க செய்யும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடையும், அதனால் உடல் எடையை இழக்க நேரிடும். நீண்ட நேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும், அதன் பின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.