சீன நகரத்தில் விபிஎன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்

சீன நகரத்தில் விபிஎன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்

சீனாவில் இருந்து குறிப்பிட்ட நகரத்தில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அந்நாட்டின் மிகவும் பாதுகாப்பான கிரேட் ஃபயர்வால் தடுப்பை கடந்து விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (virtual private networks -VPNs) பயன்படுத்துவோருக்கு அபராதம், மற்றும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட் ஃபயர்வால் மூலம் அந்நாட்டில் இண்டர்நெட் மூலம் குற்றசம்பவங்களை ஊக்குவிக்கும் தரவுகள் சென்சார் செய்யப்பட்டு வருகின்றது. 
 
சீனாவின் தென்மேற்கு பகுதியான சாங்கிங் நகராட்சியின் புதிய விதிமுறைகளின் படி சீனாவின் கிரேட் ஃபயர்வால் கடந்து விபிஎன் பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சட்டம் மற்றும் சைபர்-ஸ்பேஸ் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
புதிய கட்டுப்பாடுகளின் படி சட்டவிரோத சேனல்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு 15,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,41,259 வரை அபராதம் விதிக்கப்படும் என சாங்கிங் நகராட்சியின் பொது பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கட்டுப்பாடுகள் சீனா முழுக்க விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
 
சீனாவின் கிரேட் ஃபயர்வால் நெட்வொர்க் கட்டமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சீனா முழுக்க பல்வேறு இண்டர்நெட் பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல சமூக வலைத்தளங்களான கூகுள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்டவை அங்கு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.