சுசுகி ஜிக்சர் 250 இந்திய வெளியீட்டு விவரங்கள்

சுசுகி ஜிக்சர் 250 இந்திய வெளியீட்டு விவரங்கள்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150சிசி மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக சுசுகி ஜிக்சர் 150 இருக்கிறது. என்ட்ரி-லெவல் பிரிவில் மற்ற மாடல்களை விற்பனை செய்யாத நிலையில், சுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மாடலினை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து ஆட்டோகார் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சுசுகி ஜிக்டசர் 250சிசி பைக் தற்போதைய ஜிக்சர் 150 மாடலுக்கு சிறந்த அப்கிரேடாக இருக்கும். துவகத்தில் ஜிக்சர் 250 நேக்கட் வெர்ஷன் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின், ஜிக்சர் 250 ஃபேர்டு வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

புதிய ஜிக்சர் 250 மாடலில் GSX-S750  மற்றும் GSX-S1000 மாடல்களை போன்ற ஸ்டைலிங் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும் இந்தியாவுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஜிக்டர் 250சிசி மாடல்கள் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

 

ஜிக்சர் 250 மாடலில் 250சிசி இன்ஜின் மற்றும் ஆயில் கூலிங் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 22 முதல் 25 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஜிக்சர் 250 என்ட்ரி-லெவல் டூரிங் மோட்டார்சைக்கிளாக பிரான்டிங் செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

சுசுகி ஜிக்சர் 250 மாடலின் ஃபிரேம் தற்போதைய ஜிக்சர் 150 மாடலை போன்ற ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கம், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இதில் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.