சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் புதிய அக்சஸ் 125 மேட் கலர் அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் புதிய அக்சஸ் 125 மேட் கலர் அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அக்சஸ் 125 மாடலின் மேட் நிற பதிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் ஃபிப்ரியான் கிரே மற்று்ம மெட்டாலிக் மேட் பிளாக் நிறங்களில் வரும் புதிய அக்சஸ் 125 டிஸ்க் பிரேக்களை கொண்டுள்ளது. 
 
சுசுகி அக்சஸ் 125 மேட் பதிப்பு இந்திய விலை ரூ.66,261 (ஆன்-ரோடு) முதல் துவங்குகிறது. இத்துடன் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பேர்ல் சுசுகி டீப் புலூ, கேண்டி செனோமா ரெட், பேர்ல் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் ஃபிப்ரியோன் கிரே, மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் நிறங்களிலும் விற்பனை செய்யப்படும். 
 
மேட் பினிஷ் செய்யப்பட்ட புதிய அக்சஸ் 125 இயந்திரங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் 124 சிசி, BS4 ஃபோர்-ஸ்டிரோக் சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொண்டு இயங்குகிறது. 8.5 HP செயல்திறன் 9.8Nm டார்க் வெளிப்படுத்துகிறது.
 
குரோம் ஹெட்லேம்ப், சுசுகி ஈசி ஸ்டார்ட் சிஸ்டம், முன்பக்க பாக்கெட், 21.8 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி, போனினை சார்ஜ் செய்யும் போர்ட், அலாய் வீல், தானாக ஆன் ஆகும் ஹெட் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆயில் சேஞ்ச் இன்டிகேட்டர், டூயல் ட்ரிப் மீட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.