சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976

சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. * 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜான்சன் 

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. * 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜான்சன் அமெரிக்காவின் 17-வது அதிபரானார். * 1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. * 1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர். * 1940 - இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நார்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். * 1943 - கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். * 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்- பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

* 1986 - லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது. * 1989 - இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர். * 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. * 1997 - மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர். * 2002 - ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர். * 1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.