
சென்னை சூப்பர் கிங்ஸ் தீம் கொண்ட நெக்சன் ஐபிஎல் எடிஷன்
டாடா நெக்சன் ஐபிஎல் எடிஷன் கார் மும்பை இந்தியன்ஸ் டீகல்களை கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. தற்சமயம் ரஷ்லேன் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் நெக்சன் ஐபிஎல் எடிஷன் சென்னை சூப்பர் கிங்ஸ் தீம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
முந்தைய வெர்ஷன் போன்றே புதிய சிஎஸ்கே தீம் கொண்ட நெக்சன் மாடலும் டாப்-என்ட் XZ பிளஸ் ட்ரிம் சார்ந்து இருக்கிறது. ஐபிஎல் 2018 கிரிகெட் தொடரின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரர் ஆக இருக்கிறது. ஐபிஎல் 2018 தொடர் நாயகனுக்கு டாடா நெக்சன் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் நெக்சன் ஐபிஎல் எடிஷன் டூயல்-டோன் வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் மற்றும் மஞ்சள், சிஎஸ்கே டீகல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பின்புறம் SRT பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. டாடா நெக்சன் ஐபிஎல் எடிஷன் மாடலின் வீல் ஆர்ச், உள்புள ஸ்கிர்ட், ரூஃப்லைன், பின்புற வின்ட்ஷீல்டு, பம்ப்பர் உள்ளிட்டவை மஞ்சள் நிறம் கொண்டிருக்கிறது.

இதே போன்று ORVM, கதவுகள், முன்பக்கம் பம்ப்பர். அலாய் வீல் உள்ளிட்டவற்றிலும் மஞ்சள் நிறம், முன்பக்கம் ஃபென்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் லோகோ வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் வெர்ஷனுடன் ஒப்பிடும் போது டாடா நெக்சன் சிஎஸ்கே வெர்ஷன் வித்தியாச வடிவமைப்பு கொண்டுள்ளது.
முன்பக்கம் பம்ப்பர் வித்தியாசமாக காட்சியளிப்பதோடு, கிரில் மேல்பக்கம், ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வெள்ளை நிறம் கொண்டிருக்கிறது. தற்போதைய ஸ்டான்டர்டு மாடலை விட புதிய மாடலின் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாக இருக்கிறது.
டாடா நெக்சன் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 108 பிஹெச்பி பவர், 170என்எம் டார்கியூ செயல்திறன், டீசல் இன்ஜினில் 108ய பிஹெச்பி பவர், 260 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.