செப்டம்பரில் இந்தியா வரும் சுசுகி வி-ஸ்டாம் 650 XT

செப்டம்பரில் இந்தியா வரும் சுசுகி வி-ஸ்டாம் 650 XT

 

சுசுகி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியுளஅளது. சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்த சுசுகி அடுத்து வி-ஸ்டாம் 650 XT மோட்டார்சைக்கிளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுசுகி வி-ஸ்டாம் 650 XT செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

 

புதிய சுசுகி வி-ஸ்டாம் 650 XT இந்திய விலை ரூ.7.75 முதல் ரூ.8.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடல் கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் பென்லி TNT 600 GT உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டதால் சுசுகி GSX-S750 விலை வெகுவாக குறைக்க முடிந்தது. இதே வழிமுறையை சுசுகி தனது 650 XT மாடலுக்கும் பின்பற்ற இருக்கிறது. ஹயபூசா மற்றும் GSX-S750 மாடல்களைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் மூன்றாவது மோட்டார்சைக்கிளாக சுசுகி வி-ஸ்டாம் 650 XT இருக்கிறது. 

 

முதற்கட்டமாக இன்டர்மோட் 2016 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சுசுகி வி-ஸ்டாம் 650 XT இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகமானது. வி-ஸ்டாம் 650 XT மாடலின் முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கிறது. 

 

சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடலில் 650சிசி வி-ட்வின் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே இன்ஜின் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் வி-ஸ்டாம் 650 XT மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் ஸ்டைலிங் பெரிய வி-ஸ்டாம் 1000 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. #SUZUKI #motorcycle

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.