சோர்வு நீக்கும், கொழுப்பைக் குறைக்கும், நரம்புகள் வலுவாக்கும் வரகு!

சோர்வு நீக்கும், கொழுப்பைக் குறைக்கும், நரம்புகள் வலுவாக்கும் வரகு!

ம் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களுக்கு நாம் உண்ணும் உணவுகளே காரணமாக இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் எண்ணெய் மூலமாகவோ  அல்லது வேறு உணவுப் பொருள்கள் மூலமாகவோதான் நோய்க்கான காரணிகள் பரவுகின்றன. இன்று நாம் பயன்படுத்தும் அரிசி முதல் சர்க்கரை வரை அத்தனையும் நமக்கு நோய்களைத் தருபவையாகவே இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. `இப்படி ஒரு சூழல் இருந்தால், நாம் எதைத்தான் உண்பது... இதற்கு வேறு வழியே இல்லையா... எந்த உணவு நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்?’ என்று தேடி அலைபவர்களை நாம் அதிகம் பார்க்க முடிகிறது.

\"வரகு\"

இது போன்ற சிக்கல்களுக்காகவே இயற்கை முறையில் சிறுதானியங்களைக் கொண்டு , ஒரு துளி எண்ணெய் இல்லாத, வேக வைக்காத உணவு வகைகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும், செய்முறையையும் விளக்கிவருகிறார் படையல் சிவக்குமார். சிறு தானியங்களில் வரகு தனித்தன்மை வாய்ந்தது. வரகு அவலைக் கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரு லட்டு பற்றியும் அதன் பலன்களையும் விவரிக்கிறார் இங்கே... \"படையல்

``இன்று நாம் பயன்படுத்தும் அரிசியால் நமக்குப் பல்வேறு தீமைகள் உண்டாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதனால்தான் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய சிறுதானியமான வரகு அவலை வைத்து உணவு தயாரிக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், வரகு போன்ற சிறுதானியங்களைக் கண்டாலே இது பெரியவர்கள் உண்ணும் உணவு என்று பலரும் விலகிச் செல்கின்றனர். அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பக்கூடிய லட்டை வரகு அவலில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தோம். இதைத் தயாரிப்பது மிகவும் எளிதான ஒன்று . 

நிலக்கடலை, பொட்டுக்கலை, முந்திரி ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துத் தனித்தனியாகப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல 5 ஏலக்காய்களையும் தனியாக எடுத்து, பொடிசெய்துகொள்ள வேண்டும். கரும்புச் சர்க்கரை (100 கிராம்), வெள்ளரி விதை (50 கிராம்), தேங்காய்த்துருவல் (ஒரு முழுத் தேங்காயில் துருவியது), உலர் திராட்சை (50 கிராம்) ஆகியவற்றையும் தயாராக எடுத்துக்கொள்ள வேண்டும். லட்டு செய்ய 100 கிராம் வரகு அவல் தேவை.

\"வரகு

வரகு அவலை தண்ணீர்விட்டு அலசி , உடனே நன்கு தண்ணீர் வடிய கைகளால் பிழிந்து , வாய் அகன்ற பேசினில் அல்லது பாத்திரத்தில் பரப்பிக்கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துருவல், நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, ஏலக்காய் பொடி வகைகள், உலர் திராட்சை, வெள்ளரி விதை போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குகளாக வரகு அவலின் மேல் தூவவும். பிறகு, அவல் கலவையைச் சப்பாத்தி மாவு பிசைவதுபோல் நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டவும். வரகு அவல் உருண்டையின்மீது பாதாம் பருப்பை வைத்து அழகுபடுத்தலாம். சுவையான, ஆரோக்கியமான, ஆற்றல் மிகுந்த இயற்கை வரகு அவல் லட்டு தயார்’’ என்கிறார் படையல் சிவக்குமார். மேலும் இது தரும் பயன்களைப் பற்றியும் விளக்குகிறார்...

\"கொழுப்பு\"

பயன்கள் :

*  உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* அதிக புரதச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் நிறைந்தது.

* உடனடி ஆற்றல் தரவல்லது.

உடல் அயர்ச்சியைப் போக்கும்

* நரம்புகள் பலப்படும்

* உயிராற்றல் அதிகரிக்கும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.