ஜலதோஷத்தை குணமாக்கும் ஆயுர்வேதம்

ஜலதோஷத்தை குணமாக்கும் ஆயுர்வேதம்

ஜலதோ‌ஷம் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். மருந்து எதுவும் சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களில் போய்விடும் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஜலதோ‌ஷத்துக்கென்று உடனடி தீர்வு கிடையாது. ஜலதோ‌ஷம் உடலை சமநிலைக்குக் கொண்டு வரும் தற்காப்பு. ஆகவே உடல் சரியானால்தான் ஜலதோ‌ஷம் சரியாகும்.

பெயரிலேயே இருப்பது போல (ஜலம்) குளிர்ந்த நீர், மழை, குளிர் காற்று ஆகிய காரணங்களால் ஜலதோ‌ஷம் உடனே வருகிறது. ஏறத்தாழ 200 வகை வைரஸ் கிருமிகள் ஜலதோ‌ஷத்தை உண்டாக்குகின்றன என்பது வியப்பாக இருக்கும். ஜலதோ‌ஷம் இருப்பவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் கிருமிகள் காற்றில் பரவி, வேறு பொருட்கள் மீதும் படிந்து விடுகின்றன. 

காற்றிலிருந்தோ அப்பொருட்களைத் தொடும்போதோ நம் உடலில் புகுந்து விடுகின்றன. நல்ல ஓய்வும், நல்ல உணவும், சுத்தமான சூழலும் இருந்தாலே ஜலதோ‌ஷம் சரியாகி விடும். ஆனால் மிகுந்த துன்பப்படுத்தி விடும். ஆயுர்வேதத்தில் ஜலதோ‌ஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன.

மூக்கடைப்பு

* ஓமத்தைக்கசக்கி, பருத்தித்துணியில் கட்டி, தலையணை அருகே வைக்கலாம்.

* ஏலக்காய் விதைகளை தணலில் போட்டு புகையை உறிஞ்சலாம்.

இருமல்

தூசு மற்றும் கிருமிகள் மூக்கு வழியாக உள்ளே வரும்போது, அவற்றை வெளியே அனுப்ப உடல் எடுக்கும் முயற்சி தும்மல். தும்மல் மூலம் வெளியே அனுப்ப முடியாதபோது, ஜலதோ‌ஷம் வருகிறது. இந்த சளியை வெளியே அனுப்ப நமது உடல் எடுக்கும் நடவடிக்கையே இருமல்.

இருமலே ஒரு நோய் என்று, அதை தடுக்க மருந்து சாப்பிடுகிறோம். உண்மையில் வெளியில் இருந்து உடலுக்குள் வந்த ஒவ்வாதபொருட்களை வெளியில் அனுப்பும் நல்ல காரியமே இருமல் என்பதைப்புரிந்து, சளியைக்குணமாக்க முயல வேண்டும்.

இருமலுக்கான சில வீட்டு முறை வைத்தியங்கள்

* 10 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலுடன், 1 டேபிள் ஸ்பூன் கசகசா, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரவில் தூங்கும் முன்பு குடிக்க வேண்டும்.

* தேன், இஞ்சி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தினமும் 2, 3 முறை 1 டீஸ்பூன் வீதம் குடிக்கலாம்.

* 3 மிளகு, ஒரு துளி கருஞ்சீரகம், ஒரு துளி உப்பு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

* சம எடை அளவு மிளகுத்தூள், கற்கண்டு சேர்த்து கலந்து, தேவையான அளவு நெய் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, தினமும், 3,4 முறை ஒவ்வொரு உருண்டையாக உட்கொள்ள வேண்டும்.

* குழந்தைகளுக்கு 1 டீஸ்பூன் துளசி சாறை, தினமும் 2,3 முறை கொடுக்கலாம்.

* வெதுவெதுப்பான பாலில் ஒரு துளி மஞ்சள்தூள் சேர்த்து இரவில் குடிக்கலாம்.

கக்குவான் இருமல்

* 10 கிராம் துளசியையும், 10 கிராம் மிளகையும், அரைத்து, தேன் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, தினமும் 4 முறை சாப்பிடவும். இதை அப்படியே விழுங்காமல், மெதுவாக சாப்பிட வேண்டும்.

* வறண்ட இருமலுக்கு துளசி, இஞ்சி, வெங்கா யம் இவற்றின் சாற்றுடன் தேன் சேர்த்து எடுக்க வேண்டும்.

* சளியுடன் வரும் இருமலுக்கு கற்கண்டையும் சேர்க்க வேண்டும்.சளியுடன் கூடிய இருமல்

* தினமும் 3,4 முறை சம அளவு வெங்காயச் சாறும், தேனும் கலந்து குடிக்க வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை வராமலிருக்க, முன் எச்சரிக்கை மருந்தாக எடுக்கலாம்.

இப்பிரச்சினையால் சிரமப்படும் குழந்தை களுக்கு, கபத்தை உண்டாக்கும். பால், நெய், இனிப்புகள், அரிசி, மைதாவால் செய்யப்பட்ட பொருட்கள், சர்க்கரை ஆகிய பொருட்களைக் கொடுக்கக் கூடாது.

சில வீட்டு முறை சிகிச்சைகள்:

* கிராம்பை, ஒரு துளி உப்புடன் மெல்லலாம். தொண்டையிலிருக்கும் கரகரப்பு நீங்கும். சளி அகலும்.

* இஞ்சிப்பொடி, கிராம்புப் பொடி, பட்டைப் பொடி மூன்றும் ½ ஸ்பூன் அளவு எடுத்து அதன் மீது 1 கப் கொதிக்கும் நீரை ஊற்றி, சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி, 1 ஸ்பூன் தேன் கலந்து கொடுக்க வேண்டும்.

தொண்டை கட்டுவது, குரல் கம்முவது

* இவை இரண்டுக்குமே மா விலை நல்ல மருந்து, மாவிலைக் கொழுந்தை சுத்தமான தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, வடித்து, அதில் சில துளி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

* மாம்பூவை நெருப்பில் போட்டு, அந்தப் புகையைச் சுவாதித்தாலும், தொண்டைக் கட்டு சரியாகும்.

மூக்கடைப்பு

* பச்சை ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் இவற்றையும் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, அதை அடிக்கடி மூக்கில் உரிஞ்ச வேண்டும்.

மூக்கில் நீர்வடிதல்:

* ஜாதிக்காயைப் பொடியுடன் சேர்த்து கல்லில் அரைத்து, நெற்றியிலும், மூக்கிலும் பற்றாகப் போடலாம்.

தும்மல்

வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன் 1 கப் நீரில் கொதிக்க விட்டு, பாதியாகக்குறைந்ததும், வடிகட்டி, காலை, மாலை இரு வேளையும், 1 டேபிள் ஸ்பூன் அளவு தினமும் சில நாட்களுக்கு அருந்தவும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.