ஜியோவுக்கு போட்டியாகும் புது சலுகை: ஐடியா அதிரடி

ஜியோவுக்கு போட்டியாகும் புது சலுகை: ஐடியா அதிரடி

ஜியோவின் புதிய சலுகைகளுக்கு போட்டியாக ஐடியா நிறுவனமும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் படி மாதம் ரூ.300 செலுத்தி தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும் புதிய சலுகை போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதிய ஐடியா சலுகை அனைத்து போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ரூ.300 செலுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஐடியா புதிய சலுகைகளை மார்ச் 2018 வரை பெற முடியும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முதல் மூன்று மாதங்களுக்கு ஐடியா போஸ்ட்பெயிட் திட்டங்களில் ரூ.199 முதல் ரூ.349 வரை செலுத்துவோர் கூடுதலாக ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் மாதம் ரூ.349 முதல் ரூ.498 வரை செலுத்துவோர் கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
ஐடியா போஸ்ட்பெயிட் திட்டங்களில் மாதம் ரூ.499க்கும் அதிகமாக செலுத்துவோர் புதிய திட்டத்தில் சேரும் போது முதல் மூன்று மாதங்கள் இலவச சேவைகளை பெற முடியும். மூன்று மாதங்களுக்கு பின் மாதம் ரூ.300 செலுத்தும் சலுகையை மார்ச் 2018 வரை பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோவின் இலவசங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன. எனினும் தற்சமயம் வரை குறைந்தபட்ச விலையை ஜியோ வழங்குகிறது. இதோடு ஜியோ பிரைம் திட்டத்தில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, கூடுதல் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது போட்டியை மேலும் கடுமையாக்கியுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.