ஜியோ போட்டி எதிரொலி: ஐடியாவின் அசத்தல் சலுகை அறிமுகம்

ஜியோ போட்டி எதிரொலி: ஐடியாவின் அசத்தல் சலுகை அறிமுகம்

ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 70 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் 1 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 
 
புதிய சலுகையில் 3ஜி வேகம் மட்டுமே வழங்கப்படும் என்றும், அன்லமிட்டெட் அழைப்புகள் ஐடியா நம்பர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றிற்கு 300 நிமிடங்களும், வாரத்திற்கு 1200 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. 
 
ஐடியா செல்லுலார் அறிவித்துள்ள புதிய சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை தெரிந்து கொள்ள தங்களின் மொபைல் நம்பர் பயன்படுத்த வேண்டும்.  
 
\"\"
 
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.309 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 4ஜி டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் என்பதோடு இலவச எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. 
 
இதேபோல் வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் சலுகையை அறிவித்தது. அதன்படி ரூ.786 விலையில் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.