ஜி.எஸ்.டி. ரேட் ஃபைன்டர் செயலி: மத்திய நிதி மந்திரி வெளியிட்டார்

ஜி.எஸ்.டி. ரேட் ஃபைன்டர் செயலி: மத்திய நிதி மந்திரி வெளியிட்டார்

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் வசதி கொண்ட ஜி.எஸ்.டி. ரேட் ஃபைன்டர் எனும் புதிய செயலியை வெளியிட்டுள்ளார். 
 
புதிய செயலி பெயருக்கு ஏற்றார்போல் ஜி.எஸ்.டி. வரிமுறையின் கீழ் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய வரி விகிதத்தை அறிந்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் டவுன்லோடு செய்யக் கூடிய புதிய செயலி ஆஃப்லைன் மோடிலும் வேலை செய்யும். 
 
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் ஜி.எஸ்.டி. ரேட் ஃபைன்டர் செயலியில் குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையின் பெயர் அல்லது தலைப்பை பதிவு செய்து, புதிய வரிகளை விரிவாக பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
\"\"
 
செயலி வழங்கும் பதில்களை விரிவாக பார்க்க ஸ்கிரால் செய்ய வேண்டும், குறிப்பாக ஏதேனும் பொருள் சார்ந்த தகவலை அறிந்து கொள்ள அதனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு கிளிக் செய்ததும் பாப்-அப் விண்டோவில் ஜி.எஸ்.டி. விலை மற்றும் சேவைகளின் தகவல்கள் விரிவாக இடம்பெற்றிருக்கும். 
 
ஜி.எஸ்.டி. ரேட் ஃபைன்டர் தேசிய சுங்கத் துறை முனையத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (Central Goods and Service Tax), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (State Goods and Service Tax) அல்லது யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (Union Territory Goods and Service Tax) செலுத்த வேண்டுமா என்பதை பார்க்க முடியும்.    
 
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய செயலியை கொண்டு உணவகம் அல்லது காலணிகள் உள்ளிட்டவற்றை வாங்கும் போது புதிதாய் மாற்றப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிகளை தெரிந்து கொள்ள முடியும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.