ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டார்: கி.மு. 44- மார்ச் 15

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டார்: கி.மு. 44- மார்ச் 15

கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும், அறிவிற்சிறந்த இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார்

தனது 16-ம் வயதில் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை திருமணம் செய்துக் கொண்ட சீசர்,  பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். அந்த வேளையில் தெர்முஸ் என்ற ரோமனியப் படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார்.

அந்த முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்சியால் அனுப்பப்பட்ட கப்பல் படையுடன் மிதிலின் நகரை தெர்முஸ் வென்றார். இதன் மூலம் “Corona Civica” என்ற வெற்றி கிரீடத்தை அணியும் உரிமையை சீசர் பெற்றார்.

பின்னர், ரோம் நகருக்குத் திரும்பி வந்த சீசர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். கி.மு. 69ஆம் ஆண்டில் சீசரின் முதல் மனைவி கொர்னெலியா காலமானார். கி.மு. 67ஆம் ஆண்டில் பொம்பெயா என்ற பெண்ணை மணந்து கொண்ட அவர், அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார்.

எகிப்து நாட்டை போரின் மூலம் வெல்ல ஜூலியஸ் சீசர் துணிந்தபோது, கணவனால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த பேரழகி கிளியோபாட்ரா, சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார்.

இந்தப் போரில் தோலமியை சீசர் கொன்றார். (தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு.) கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார்.

எகிப்து நாட்டினை வென்ற சீசர் அந்நாட்டுக்கு தனது காதலி கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். கவுல் போரின் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமான ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார்.

அவரது அதிகாரத்தை பறைசாற்றும் விதமாக கிரேக்க நாடு முழுவதும் சீசருக்கு மாபெரும் சிலைகள் எழுப்பப்பட்டன. நாணயங்களிலும் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது.

மேலோங்கி வரும் சீசரின் பேராதிக்கத்தை கண்டு கலக்கமடைந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். இதற்கான சதித் திட்டம் வகுக்கப்பட்டது.

அரண்மனையின் ஆலோசனை மண்டபத்தில் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து கி.மு. 15-03-44 அன்று சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர்.

தனது 55-வது வயதில் பாம்பேயின் சிலையின் அடிப்பகுதியில் சீசர் கீழே விழுந்த போது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்கால பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை (கேலண்டர்) உருவாக்கியவராகவும் சீசரின் சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.