ஜூலை விற்பனையில் அசத்திய டொயோட்டா

ஜூலை விற்பனையில் அசத்திய டொயோட்டா

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஜூலை 2017 மாத விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 2017 ஜூலை மாதத்தில் மட்டும் 43 சதவிகிதம் வளர்ச்சியை டொயோட்டா பதிவு செய்துள்ளது. 
 
டொயோட்டா வரலாற்றில் ஒரே மாதத்தில் அதிக விற்பனை செய்ததில் மூன்றாவது பெரிய விற்பனையாக இது அமைந்துள்ளது. அதன்படி டொயோட்டா நிறுவனம் 17750 யுனி்ட்களை ஜூலை 2017 மாதத்தில் விற்றுள்ளது. இத்துடன் 1723 ஈட்டியோஸ் யுனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 
 
இந்தியாவில் மட்டும் 12404 யுனிட்களை விற்பனை செய்துள்ள டொயோட்டா 1344 ஈட்டியோஸ் யுனிட்களை ஜூலை 2016-இல் விற்பனை செய்திருந்தது. ஜி.எஸ்.டி. வரிமுறையை அமலாக்கி புதிய விலைப்பட்டியலை ஜூலை மாத துவக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா வழங்கியது.  
 
\"\"
 
இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் ஜூலை 2017-இல் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னோவா கிரிஸ்டா மற்றும் புத்தம் புதிய ஃபார்ச்சூனர் மாடல்களும் மே 2016 மற்றும் 2016 நவம்பர் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
\'இரட்டை இலக்கு அளவுகளில் வளர்ச்சியை பெற உதவியாக இருந்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை கடந்த மாதம் எடுத்திருந்தோம். ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பின் விநியோகஸ்தர்கள் எவ்வித சிரமத்தையும் சந்திக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.\' என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் விற்பனை பிரிவின் துணை தலைவர் ராஜா தெரிவித்தார்.     
 
இம்மாதத்தில் மட்டும் இன்னோவா கிரிஸ்டா மாடல்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் மட்டும் 9300 யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புத்தம் புதிய ஃபார்ச்சூனர் ஒட்டுமொத்த விற்பனையில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. மொத்தம் 3400 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. எஸ்.யு.வி. தவிர கோரோலா, பிளாட்டினம் ஈட்டியோஸ் மற்றும் ஈட்டியோஸ் லாவா உள்ளிட்ட மாடல்களும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை சந்தித்துள்ளது. 
 
\"\"
 
எனினும் ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பின் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் விற்பனை மந்தமாகியுள்ளது. அரசாங்கம் மாசில்லாத தொழில்நுட்பத்தை சார்ந்த இவ்வகை வாகனங்களுக்கான வரியை முன்பு இருந்தது போல் குறைக்கும் என நம்பிக்கை வைத்திக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
இவ்வாறான முடிவு அமலாக்கப்படும் பட்சத்தில் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய வகை மின்சாதன திறன் மிக்க வாகனங்களை தேர்வு செய்ய மக்கள் விரும்புவர் என்றும் அவர் தெரிவித்தார்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.