டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்ட பிளாக்பெரி ஸ்மார்ட்போன்

டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்ட பிளாக்பெரி ஸ்மார்ட்போன்

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஆப்பிள் மற்றும் இதர சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வதிகமாக பிளாக்பெரி பல்வேறு புதிய முடிவுகளை எடுத்து வருகிறது. முன்னதாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை தொடர்ந்து இம்முறை முழுமையான டச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. 

ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை முன்கூட்டியே வழங்குவதில் பிரபலமானவரான எவான் பிளாஸ் தனது டுவிட்டரில் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் பிளாக்பெரி \'மோஷன்\' என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களில் பிளாக்பெரி நிறுவனம் கிரிப்டான் என்ற ஸ்மார்ட்போனினை தயாரித்து வருவதாக கூறப்பட்டது. தற்சமயம் வரை புதிய ஸ்மார்ட்போன் கிரிப்டான் என்று அழைக்கப்படுமா அல்லது மோஷன் என அழைக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில், இதன் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது. 

\"\"

அதன்படி புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 அல்லது 626 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. 

இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பெசல்கள் மற்றும் ஹோம் பட்டன் இடம்பெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. இத்துடன் பிளாக்பெரி லோகோ மற்றும் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் பொறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டுகளில் வால்யூம், பவர் பட்டன் மற்றும் கன்வீனியனஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.  

புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் என்றும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.