டட்சன் ரெடி-கோ AMT இந்தியாவில் வெளியானது

டட்சன் ரெடி-கோ AMT இந்தியாவில் வெளியானது

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் AMT மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய டட்சன் ரெடி-கோ AMT விலை இந்தியாவில் 3.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. ரெடி-கோ 1.0 லிட்டர் விநியோகம் இந்தியா முழுக்க இன்று (ஜனவரி 24) முதல் துவங்கியுள்ளது.
 
புதிய டட்சன் ரெடி-கோ மாடலுக்கான முன்பதிவுகள் ஜனவரி 10-ம் தேது துவங்கின. இந்த பிரிவில் அதிக அம்சங்கள் நிறைந்த மாடலாக ரெடி-கோ 1.0 லிட்டர் AMT மாடல் இருக்கிறது என டட்சன் தெரிவித்துள்ளது. ரெடி-கோ ஸ்மார்ட் டிரைவ் ஆட்டோ இரண்டு வித டிரைவிங் மோட்: டூயல்-டிரைவிங் மோட் மற்றும் ரஷ் ஹவர் மோட் கொண்டிருக்கிறது. இதனால் நகர்ப்புறங்களில் ஓட்டவும் தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
 
டூயல்-டிரைவிங் மோட் கொண்டு வாடிக்கையாளர்கள் ஆட்டோமேட்டெட் மற்றும் மேனுவல் மோட்களிடையே மாற்றிக் கொள்ள முடியும். இதனால் மலையேறும் போதோ, இறங்கும் போதோ அல்லது நகர்ப்புறங்களில் பயணம் செய்ய ஏதுவாக டிரைவிங் மோட்களை தேர்வு செய்து கொள்ள முடியும். 
 
 
ரஷ் ஹவர் மோட் மணிக்கு 5-6 கிலோமீட்டர் வேகத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் சிரமம் இன்றி பயணிக்க வழி செய்யும். ரெடி-கோ AMT வேரியன்ட் நகர்ப்புறங்களில் கார் ஓட்ட விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், விற்பனை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
டட்சன் ரெடி-கோ AMT மாடலில் 1.0 லிட்டர் இன்டலிஜண்ட் ஸ்பார்க் ஆட்டோமேட்டெட் தொழில்நுட்பம் (iSAT), 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 91 என்.எம். டார்கியூ கொண்டிருக்கிறது. ரெடி-கோ AMT வேரியன்ட் ரெனால்ட் க்விட் மாடலில் வழங்கப்பட்ட CMF-A தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால், க்விட் மாடலில் வழங்கப்பட்ட பெரும்பாலான அம்சங்கள் புதிய ரெடி-கோ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
 
டட்சன் ரெடி-கோ AMT மாடலில் ப்ளூடூத் ஆடியோ ஸ்டிரீமிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. AMT ஹேட்ச்பேக் மாடலின் உள்புறம் கருப்பு நிறம் கொண்டிருப்பதோடு, சென்ட்ரல் லாக்கிங் மற்றும் ரிமோட் கீ வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 185 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ், அதிக கேபின் இட வசதி மற்றும் ஹெட் ரூம் வழங்கப்பட்டுள்ளது.
 
ட்டசன் ரெடி-கோ AMT மாடல் ரூபி ரெட், லைம் கிரீன், வைட், கிரே மற்றும் சில்வர் என ஐந்து நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.